மேலும் அறிய

Prince Lyrical Video: ஹீரோ பேர்லயே மிஸ்டேக்கா.? எழுத்துப் பிழையுடன் சிவகார்த்திகேயன் பெயர்...நொந்துகொள்ளும் ரசிகர்கள்

”வேறு எதாவது பிழை இருந்தாலும் ஓகே, படத்தில் நாயகன் பெயரிலேயே எடுத்ததும் பிழையா” என சிவகார்த்திகேயன் ரசிகர்களும் இணையவாசிகளும் அங்கலாய்த்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ’பிரின்ஸ்’ படத்தில் முதல் பாடல் வெளியாகியுள்ள நிலையில், லிரிக்கல் வீடியோவில் நாயகன் சிவகார்த்திகேயனின் பெயர் எழுத்துப் பிழையுடன் இடம்பெற்றுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷப்கா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் ப்ரின்ஸ்.

’டான்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகி வருகிறது. உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா சிவாவுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கும் நிலையில், தெலுங்கு இயக்குநர் அனுதீப் படத்தை இயக்குகிறார்.

இப்படம் வரும் தீபாவளியன்று ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்யராஜ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கெனவே தெரிவித்தபடி இன்று வெளியாகியுள்ளது. ’பிம்பிலிக்கா பிலாப்பி’ எனும் இப்பாடலின் லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றுள்ள சிறு பிழை தற்போது இணையவாசிகள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது.

அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் தவறுதலாக ’சிவகாத்திகேயன்’ என ‘ர்’ விடுபட்டு எழுத்துப்பிழையுடன் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில், ”வேறு எதாவது பிழை இருந்தாலும் ஓகே, படத்தில் நாயகன் பெயரிலேயே எடுத்ததும் பிழையா” என சிவகார்த்திகேயன் ரசிகர்களும் இணையவாசிகளும் அங்கலாய்த்து வருகின்றனர்.

 

இதேபோல் ஏற்கெனவே பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் போஸ்டர்களில் பிழை இருந்ததாக ரசிகர்கள் சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்தனர். 

ப்ரின்ஸ் சிவகார்த்திகேயன் நேரடியாக தெலுங்கில் நடிக்கும் முதல் திரைப்படமாகும். முன்னதாக ப்ரின்ஸ் படத்துக்காக தெலுங்கில் சரளமாக பேசுவதற்காக பல நுட்பங்களை கற்றுள்ளார் சிவகார்த்திகேயன்.  ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

ப்ரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும், இதன் படப்பிடிப்பு தமிழ்நாடு, ஹைதராபாத்  மற்றும் பாண்டிச்சேரி, லண்டன் போன்ற இடங்களில் நடைபெற்றது என்றும் முன்னதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Embed widget