மேலும் அறிய
Advertisement
Watch Video : இது புதுசா இருக்கே! திருமணம் முடிந்து 1 மாதம் முடிந்ததை கொண்டாடும் பிரேம்ஜி..
Watch Video : நடிகர் பிரேம்ஜி அமரன் - இந்து திருமணம் கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று 1 மாதம் முடிந்துள்ளதை கொண்டாட்டமாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமையாளராக விளங்குபவர் கங்கை அமரன். அவரின் இளைய மகனும், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரனுமான பிரேம்ஜி அமரனும் ஒரு பிரபலமான நடிகராக வலம் வருகிறார். சிம்புவின் நடிப்பில் வெளியான 'வல்லவன்' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான பிரேம்ஜி அமரன் அதை தொடர்ந்து வெளியான சென்னை 600028 மூலம் மிகவும் பிரபலமானார். கோவா, சேட்டை, மங்காத்தா, பிரியாணி, மாநாடு, உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் நடித்து வருகிறார் பிரேம்ஜி. அவரின் நகைச்சுவைக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இசை குடும்பத்தின் வாரிசான பிரேம்ஜி அமரன் நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் இசைமைப்பாளராகவும் இருந்து வருகிறார். கோவா, 12பி, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார். முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த பிரேம்ஜி அமரனுக்கு எப்போது திருமணம் என்ற கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தன.
45 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாததால் இப்படியே சிங்கிளாகவே இருந்து விடுவாரோ என அவரின் ரசிகர்கள் வருத்தப்பட்டு கொண்டு இருக்கும் வேலையில் தான் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் ஒன்று வெளியாகி வைரலானது. ரசிகர்களுக்கு அந்த தகவல் மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.
சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணை ரகசியமாக காதலித்து வந்துள்ளார். பிரேம்ஜியின் மனைவி இந்து சேலத்தில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவர் தான் முதலில் பிரேம்ஜியிடம் காதலை தெரிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஜூன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்து விட்ட நிலையில் முதல் மாத ஆனிவெர்சரியை கொண்டாடும் வகையில் இந்து பிரேம்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
"இனிய 1 மாத திருமண நாள் வாழ்த்துக்கள்!! என்றென்றும் பிரேம்ஜியுடன்...
எங்கள் மீது அன்பையும் ஆசீர்வாதங்களையும் பொழிந்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்... பல போராட்டங்களுக்குப் பிறகு, முருகனின் ஆசியுடன், எங்கள் திருமண வாழ்க்கை தொடங்கியது. உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் நெகிழ வைத்துள்ளது.." என பகிர்ந்துள்ளார்.
அதனுடன் இந்து பிரேம்ஜிக்கு முத்தமிடும் வீடியோ ஒன்றையும் லூப் செய்து போஸ்ட் செய்துள்ளார். இந்துவின் இந்த போஸ்டுக்கு லைக்ஸ் மற்றும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion