மேலும் அறிய

பாலிவுட் முதல் இசைத்துறை வரை.. புதிய CBFC தணிக்கை குழுவில் இடம்பெற்ற 18 பிரபலங்கள்!

CBFC Members List : புதிய CBFC தணிக்கை குழுவில் ப்ரீத்தி ஜிந்தா, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட 18 பேர் இடம்பெற்றுள்ளனர். முழு பட்டியல் இதோ!

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமான CBFC-யின் புதிய குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. சினிமா, தொலைக்காட்சி, இசை, இலக்கியம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 பேர் புதிய குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த நியமனம் செப்டம்பர் 16-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடிகர்கள்

புதிய குழுவில் பாலிவுட் நடிகர்களான ப்ரீத்தி ஜிந்தா, பங்கஜ் திரிபாதி, சுனில் ஷெட்டி, மனோஜ் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ப்ரீத்தி ஜிந்தா இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக நீண்ட காலமாக பயணித்து வருபவர். பங்கஜ் திரிபாதி, கதாபாத்திர நடிகராக பல்வேறு இந்தி திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார். சுனில் ஷெட்டி நடிகர் மற்றும் தயாரிப்பாளராகவும், மனோஜ் ஜோஷி நடிகராகவும் அறியப்படுகின்றனர்.

இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்

இந்த குழுவில் தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது. பிரபல இயக்குநர் பிரியதர்ஷன், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சுப்ரியா யர்லகட்டா, திரைப்பட இயக்குநர்கள் அபிஷேக் ஜெயின் மற்றும் நீல மாதவ் பாண்டா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிரியதர்ஷன் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். சுப்ரியா யர்லகட்டா நடிகை மற்றும் தயாரிப்பாளராகவும், தெலுங்கு திரையுலகில் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவராகவும் உள்ளார்.

இசைத்துறை

இசைத்துறையில் இருந்து மூன்று முறை கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இடம்பெற்றுள்ளார். சர்வதேச அளவில் இசைப் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், திரைப்படத் துறைக்கு வெளியேயும் பல்வேறு இசை முயற்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். பஞ்சாபி பாடகர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹன்ஸ்ராஜ் ஹன்ஸும் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

எழுத்து மற்றும் விமர்சனத் துறை

இலக்கியம் மற்றும் விமர்சனத் துறையிலிருந்தும் பிரதிநிதித்துவம் உள்ளது. திரைப்பட விமர்சகரும் எழுத்தாளருமான வினோத் அனுபம், கவிஞரும் எழுத்தாளருமான யதீந்திர மிஸ்ரா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். யதீந்திர மிஸ்ரா இந்திய பாரம்பரிய இசை, சினிமா மற்றும் கலைத்துறையை மையமாகக் கொண்டு எழுதி வருபவர். வினோத் அனுபம் இந்திய சினிமா குறித்த விமர்சனங்களுக்காக அறியப்படுகிறார்.

தொலைக்காட்சி மற்றும் திரையுலகம்

தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் அறியப்பட்ட ரூபாலி கங்குலி, பல்லவி ஜோஷி, பிரசன்ஜித் சட்டர்ஜி, நிஷிகந்தா வாட் ஆகியோரும் புதிய குழுவில் உள்ளனர். பல்லவி ஜோஷி நடிகை மற்றும் தயாரிப்பாளராக செயல்பட்டு வருகிறார். வங்காளத் திரையுலகில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக பிரசன்ஜித் சட்டர்ஜி நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறார். மராத்தி நடிகை, எழுத்தாளர் மற்றும் கல்வியாளரான நிஷிகந்தா வாடும் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

நாடகத்துறை

நாடகத்துறையைச் சேர்ந்த வாமன் கேந்திரேவும் புதிய குழுவில் இடம்பெற்றுள்ளார். நாடக இயக்குநரான இவர் தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். முந்தைய CBFC குழுவிலிருந்தும் வாமன் கேந்திரே தொடர்ந்து புதிய குழுவில் இடம்பெற்றுள்ளார். எழுத்தாளர் ரமேஷ் பதாங்கேவும் முந்தைய குழுவிலிருந்து மீண்டும் இடம்பெற்றுள்ள மற்றொரு உறுப்பினர் ஆவார்.

இதன்மூலம் நடிகர்கள் மட்டுமின்றி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் மற்றும் நாடகக் கலைஞர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழுவாக புதிய CBFC அமைந்துள்ளது.

புதிய CBFC குழுவில் இடம்பெற்றுள்ள 18 உறுப்பினர்கள்

வினோத் அனுபம்
மனோஜ் ஜோஷி
அபிஷேக் ஜெயின்
ரிக்கி கேஜ்
பிரியதர்ஷன்
சுனில் ஷெட்டி
ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ்
சுப்ரியா யர்லகட்டா
யதீந்திர மிஸ்ரா
ரூபாலி கங்குலி
ப்ரீத்தி ஜிந்தா
நீல மாதவ் பாண்டா
பங்கஜ் திரிபாதி
பிரசன்ஜித் சட்டர்ஜி
பல்லவி ஜோஷி
நிஷிகந்தா வாட்
வாமன் கேந்திரே
ரமேஷ் பதாங்கே.

மத்திய அரசின் இந்த அறிவிப்புடன், 2017-ம் ஆண்டுக்குப் பிறகு CBFC குழு மீண்டும் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 2017-ல் அமைக்கப்பட்ட முந்தைய குழுவின் பதவிக்காலம் 2020-ல் முடிவடைந்தபோதும், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை அவர்கள் தொடர்ந்து பணியாற்றினர். புதிய குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாமன் கேந்திரே மற்றும் ரமேஷ் பதாங்கே ஆகிய இருவர் மட்டும் முந்தைய குழுவிலிருந்து தொடர்கின்றனர்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
கீபோர்டு பேக்கிற்குள் தூங்கிய அனிருத்.. அம்மா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!
கீபோர்டு பேக்கிற்குள் தூங்கிய அனிருத்.. அம்மா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: அன்பில் மகேஷிற்கு ஜாமின் இல்லை..! நேரு வீட்டில் ரெய்டு, முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் - தவெக விமர்சனம்
அன்பில் மகேஷிற்கு ஜாமின் இல்லை..! நேரு வீட்டில் ரெய்டு, முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் - தவெக விமர்சனம்
MK Stalin: ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
Chennai FSI: கட்டிடங்களுக்கான FSI உயருமா? உயராதா? பொருளாதார வளர்ச்சிக்கான வழி - தமிழக அரசு அஞ்சுவது ஏன்?
கட்டிடங்களுக்கான FSI உயருமா? உயராதா? பொருளாதார வளர்ச்சிக்கான வழி - தமிழக அரசு அஞ்சுவது ஏன்?
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
KN Nehru: 634 கோடி ரூபாய் லஞ்சப்புகார்; காலையிலே கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! ஆட்டத்தை மீண்டும் தொடங்கிய விஜய்!
Jail Break: தமிழ்நாட்டையே அதிரவைத்த கைதிகள் தப்பிய சம்பவங்கள்! வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?
Jail Break: தமிழ்நாட்டையே அதிரவைத்த கைதிகள் தப்பிய சம்பவங்கள்! வரலாற்றை கொஞ்சம் பார்ப்போமா?
RCB WPL 2027: ஈ சாலா கப் நமதாகுமா? அடுத்தாண்டு களமிறங்கப்போகும் ஆர்சிபி சிங்கப்பெண்கள் யார்? யார்?
RCB WPL 2027: ஈ சாலா கப் நமதாகுமா? அடுத்தாண்டு களமிறங்கப்போகும் ஆர்சிபி சிங்கப்பெண்கள் யார்? யார்?
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
TVK: நேத்து வந்தவங்களுக்கு உள்ளாட்சியில சீட்டா? தவெக நிர்வாகிகள் ஆதங்கம்! ஆனந்த் சொன்ன அந்த வார்த்தை!
Car Discount: தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
Embed widget