மேலும் அறிய

LCU: தமிழில் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் என்றால்.. பாலிவுட்டில் ப்ரஷாந்த் சினிமேடிக் யுனிவர்ஸ்.....

பாலிவுட்டில் பிரஷாந்த் வர்மா இயக்கியிருக்கும் ஹனுமான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலிவுட் மற்றுமில்லாமல் டோலிவுட், பாலிவுட் ரசிகர்களிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது எல் சி யு என்கிற லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ். சூர்யா, கார்த்தி, கமல், விஜய் என தமிழ் சினிமாவின் ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்களை ஒரே படத்தில் எதிர்பார்க்க முடியும் என்றால் அது எல்.சி.யு வில் மட்டுமே சாத்தியம். லோகேஷ கனகராஜின் இந்த முயற்சி இந்திய சினிமாவிலேயே ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளது. லோகேஷைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் சினிமேடிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ஒருவர். பாலிவுட்டில் ஹனுமான் திரைப்படத்தின் இயக்குனர் ப்ரஷாந்த் வர்மா சினிமேடிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தத் தொடரில் முதல் படமான ஹனுமான் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

 ப்ரஷாந்த் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த பாகமாக ஆதீராவும் அடுத்த ஆண்டில் வெளியாகும்  வெளியாகும் என தகவல் தெரிவித்தார் ப்ரஷாந்த்.

சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் உருவாக்குவதே எனது ஆசை

தனக்கு சின்ன வயதில் இருந்தே சூப்பர் ஹீரோக்களின் மேல் அபரிமிதமான காதல் இருந்ததாகவும். சூப்பர் ஹீரோக்களை வைத்து ஹாலிவுட்டில் எடுக்கப்படும் படங்களைப்போல் இந்தியாவிலும் எடுக்கவேண்டும் என தனது நீண்ட நாள் கனவை வெளிப்படுத்தினார். மேலும் இந்திய கலாச்சாரத்தில் இருக்கும் தொன்மக்கதைகளில் வரும் கதாபாத்திரங்களை வைத்து இந்த சினிமேடிக் யுனிவர்ஸை தான் உருவாக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார் ப்ரஷாந்த்.

மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த படங்களில் ஆர்வமுள்ள கலைஞர்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும் வழங்கியுள்ளார் ப்ரஷாந்த். கதாசிரியர்கள், திரைக்கதை ஆசிரியர்கள், படத்தொகுப்பாளர்கள், வி.எஃப்.எக்ஸ் ஆர்டிஸ்ட் ஆகியவர்கள் இந்த படங்களில் வேலை செய்ய ஆர்வமிருப்பவர்கள் இணைந்துகொள்ளலாம் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்திய சினிமாவில் மேலும் பல இயக்குனர்கள் புதிய ஐடியாக்களுடன் தங்களது சினிமேடிக் யுனிவர்சை உருவாக்கத் தொடங்கிவிட்டார்கள்.

லியோ

லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். விஜய், த்ரிஷா, மிஸ்கின் , கெளதம் மேனன் சஞ்சய் டத் ஆகிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறாரகள். இந்தப் படம் எல். சி. யு வில் இடம்பெறுமா என்கிற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது . ஆனால் அந்த பதிலைத் தெரிந்துகொள்ள படம் வெளியாகும் வரை காத்திருப்பதைத் தவிர ரசிகர்களுக்கு  வேறு வழியில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கலாம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கடைசி படம் என்று சொல்லப்படும் படத்தையும் இயக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

தலைப்பு செய்திகள்

தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
Meesaya Murukku 2 Review: பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
Meesaya Murukku 2 Review: பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Schools Leave: கோலாம்பஸ்.. கோலாம்பஸ்.. விட்டாச்சு லீவு! நாளை முதல் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
Schools Leave: கோலாம்பஸ்.. கோலாம்பஸ்.. விட்டாச்சு லீவு! நாளை முதல் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?
CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?
GST சாலையில் இனி சிக்கல் குறையுமா? தாம்பரம்–பெருங்களத்தூர் மேம்பாலத்தின் கடைசி பிரிவு திறப்பு!
GST சாலையில் இனி சிக்கல் குறையுமா? தாம்பரம்–பெருங்களத்தூர் மேம்பாலத்தின் கடைசி பிரிவு திறப்பு!
TN Weather News: இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Free Train Travel : நவம்பர் 1 முதல்.. ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.! யாருக்கெல்லாம்.? ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
நவம்பர் 1 முதல்.. ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.! யாருக்கெல்லாம்.? ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.
High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.
Embed widget