மேலும் அறிய

உங்களை ஏன் இப்படி கொண்டாடுகிறார்கள்...பத்திரிகையாளரின் கேள்விக்கு செம ரிப்ளை கொடுத்த பிரதீப் ரங்கநாதன்

டியூட் படத்தின் தெலுங்கு ப்ரோமோஷனின் போது பத்திரிகையாளரின் சர்ச்சைக்குரிய கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் கொடுத்த பதில் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது

பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜு நடித்துள்ள டியூட் திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷனின் போது பத்திர்கையாளரின் கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் கொடுத்த பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது

பிரதீப் ரங்கநாதன் கொடுத்த செம ரிப்ளை 

நீங்க ஒரு ஹீரோ மெட்டிரியல் கிடையாது. ஆனால் இரண்டு படங்களில் உங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு கடின உழைப்பால் வந்ததா அல்லது அதிர்ஷ்டமா ? என பிரதீப் ரங்கநாதனிடம் டியூட் படத்தின் ப்ரோமோஷனின் போது பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. இதற்கு அவர் கொடுத்த பதில் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. " நிச்சயமாக கடின உழைப்பு இருக்கிறது. எனக்கு கிடைக்கும் அன்பைப் பற்றி நான் கடந்த சில மாதங்களாக நிறைய யோசித்து வருகிறேன். என்னைவிட நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள்.  என்னைப் பார்க்கும் போது ரசிகர்கள் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன். நான் நடிக்கும்போதும் , சண்டைப்போடும் போதும் அவர்களே நடிப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். என்னில் அவர்கள் தங்களை பார்க்கும்போதே நான் ஹீரோவாகி விடுகிறேன்." என அவர் கூறினார் 

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் நடிகராகவும் இயக்குநராகவும் தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். கோமாளி படத்தைத் தொடர்ந்து பிரதிப் இயக்கி நடித்த லவ் டுடே மற்றும் இந்த ஆண்டு வெளியான டிராகன் ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து 100 கோடி வசூல் ஈட்டின. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பிரதீப் ரங்கநாதன் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அடுத்தபடியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள எல்.ஐ.கே படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 

தீபாவளிக்கு வெளியாகும் படங்கள்

டியூட் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார் . இந்த தீபாவளிக்கு மூன்று இளம் நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. டியூட் படம் தவிர்த்து ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் . மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Embed widget