Pradeep Ranganathan: "நல்லாயிரு போ and Move On" - DUDE பட அப்டேட்! தனியாய் நிற்கும் பிரதீப் ரங்கநாதன்!
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாக உள்ள DUDE திரைப்படத்தின் செகெண்ட் சிங்கிள் அப்டேட் இன்று (செப்டம்பர் 18 ) வெளியாகியுள்ளது.

தன்னுடைய நடிப்பில் வெளியாக உள்ள ’ட்யூட்’ (DUDE) திரைப்படத்தின் செகெண்ட் சிங்கிள் அப்டேட்டை நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
DUDE - திரைப்பட அப்டேட்:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமனவர். இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற திரைப்படத்தை தானே இயக்கி அந்த படத்தில் நயகனாகவும் நடித்து கலக்கினார். அதே போல் ட்ராகன் திரைப்படத்திலும் நடித்தார். இந்த படத்தின் வெற்றியின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கராவிடம் துணை இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் (DUDE) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்திருக்கிறார். மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறர். இந்த படத்தில் முதல் பார்வை யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ட்யூட் திரைப்படம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.
நல்லாயிரு போ and Move On:
இந்த நிலையில் ட்யூட் திரைப்படத்தின் செகெண்ட் சிங்கிள் அப்டேட்டை நடிகர் பிரதீப் ரங்கநாதன் இன்று வெளியிட்டுள்ளார்.
Respect her choice .
— Pradeep Ranganathan (@pradeeponelife) September 18, 2025
Just say ‘ Nallaru po’ and move on like #Dude pic.twitter.com/1yAZ4MN43z
நால்லாயிரு போ பாடலை நாளை திரைப்படக்குழு வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த பாடலுக்காக காத்திருப்பதாகவும், பிரதீப் ரங்க நாதன் மற்றும் படக்குழுவிற்கு வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.






















