மேலும் அறிய

4 Years Of Comali : 90s கிட்ஸா 2k கிட்ஸா.. எது பெருசுன்னு அடித்துக்காட்டிய பிரதீப்.. 4 ஆண்டுகளை நிறைவு செய்யும் கோமாளி..

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் , சம்யுக்தா ஹெட்கே, யோகி பாபு, கே. எஸ் ரவிகுமார் உள்ளிட்டவர்கள் நடித்து பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக அறிமுகமாகிய படம் கோமாளி. இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது.

90s கிட்ஸ் vs 2k கிட்ஸ்

சமூக வலைதளங்களில் அதிகம் மோதிக்கொள்ளும் இரு தரப்புகள் என்றால் 90s கிட்ஸ் 2k கிட்ஸ் . எங்க தலைமுறையில் என்ன எல்லாம் இருந்தது தெரியுமா? என்று ஒருவர் சொல்ல, உங்க தலைமுறையில் இதெல்லாம் இருக்கா? என்று ஒருவர் கேட்க.. என இந்த சண்டை முடிவடையாமல்  நீண்டுகொண்டே இருக்கும். பேசாமல் எது பெருசுன்னு அடிச்சுக்காட்டு என்று வடிவேலு சொல்வதுபோல் ஒரு படத்தை எடுத்துவிடலாம் என்று முடிவு செய்தார் பிரதீப் ரங்கநாதன்.

கோமாளி

90களில் பிறந்த ஒருவர் கோமாவில் கிடந்து 2000 ஆண்டில் கண் விழித்தால் என்ன ஆகும் என்று ஒரு கதை . 90-களில் பிறந்து ஜாலியாக ஓல்டு ஸ்கூல் முறையில் கடிதம் எழுதி காதலித்து வந்தவர் ரவி (ஜெயம் ரவி)  தனது காதலி நிகிதாவிடம் (சம்யுக்தா) காதலை சொல்லப் போகையில் ஏற்படும் விபத்தில் கோமாவிற்கு சென்றுவிடுகிறார். 10 ஆண்டுகள் கழித்து அவர் கண் விழிக்கும்போது அவரது உலகமே தலைகீழாக திரும்பிவிட்டதுபோல் ஆகிவிடுகிறது. எல்லாமே மாற்றமடைந்து விட்ட உலகத்தில் எவ்வளவு முயற்சி செய்தும் தன்னை பொருத்திக்கொள்ள முடியாமல் போராடுகிறார் நாயகன்.

தனது காதலியை தேடிச்சென்றால் அவருக்கு திருமணம் ஆகிவிட்டிருப்பதை தெரிந்துகொள்கிறார். புதிதாக ஒரு வாழ்க்கையைத் தொடங்கலாம் என்றால் அவருக்கென்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அப்படியான நிலையில் தனக்கென ஒரு அடையாளம் இருப்பதை தெரிந்துகொள்கிறார். தனது குடும்பத்தில் பாரம்பரிய சிலை ஒன்று ஒரு பிரபல ரவுடியிடம் இருப்பதை கண்டுபிடிக்கிறார். எப்படியாவது அதை மீட்க வேண்டும் என்று போராடுகிறார். 90-களின் இந்த ஹீரோ எல்லா காலத்திற்குமான ஹீரோவாக மாறுகிறாரா? இல்லையா? என்பதே மீதிக் கதை.

பிரதீப் ரங்கநாதன்

கமர்ஷியல் படங்களில் வெற்றிபெற வெகுஜனத்தில் ட்ரெண்டாக இருக்கும் ஒரு விஷயத்தை மிகச்சரியாக படமாக எடுத்துவிட்டால் அது எவ்வளவு பெரிய வெற்றியடையும் என்பதை செய்து காட்டினார் பிரதீப் ரங்கநாதன். தான் இயக்கிய குறும்படத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்கிய பிரதீப், மிக குறைந்த முதலீட்டில் மிகப்பெரிய வசூலை தயாரிப்பாளருக்கு ஈட்டித் தந்தார்.

ஒரு முறை இல்லாமல் இரண்டாவது முறையாக இதே பேட்டர்னை ஃபாலோ செய்து லவ் டுடே படத்தை இயக்கி அதையும் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றினார்.

90s கிட்ஸ் 2k கிட்ஸ் க்கு இடையிலான சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Speech: ”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு
”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு" சீமான் திடீர் முடிவு
Rohit Gill: ஒரே போட்டியில் மலையாய் குவிந்த சாதனைகள்..! ரோகித் - கில் மரண அடி, பஞ்சரான மே.தீவுகள்
ஒரே போட்டியில் மலையாய் குவிந்த சாதனைகள்..! ரோகித் - கில் மரண அடி, பஞ்சரான மே.தீவுகள்
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
FlyDubai Flight: 180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்? விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் , 17,000 அடியில் பயங்கரம்
180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்..! விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் - 17,000 அடியில் பயங்கரம்
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Crime: ஃபுல் மப்பிலும் அடங்காத தமிழ்செல்வன்.. தடம் மாறிய பூவரசியால் 9 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்.!
Crime: ஃபுல் மப்பிலும் அடங்காத தமிழ்செல்வன்.. தடம் மாறிய பூவரசியால் 9 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Embed widget