மேலும் அறிய

மனைவி குறித்த பதிவை நீக்கிய பிரதீப் ஆண்டனி..என்ன காரணம் தெரியுமா?

பூஜா சக்தியைப் பிரிவதாக பிரதீப் ஆண்டனி அறிவித்த நிலையில், திருமண வாழ்க்கை மற்றும் மகன் குறித்து அவர் பகிர்ந்த உருக்கமான பதிவு கவனம் பெற்றுள்ளது.

‘பிக்பாஸ் தமிழ் 7’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் பிரதீப் ஆண்டனி, தனது மனைவி பூஜா சக்தியைப் பிரிவதாக சமூக வலைதளப் பதிவின் மூலம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்ட அவர், பின்னர் அந்தப் பதிவை நீக்கியுள்ளார்.

பிரதீப் ஆண்டனி, பூஜா சக்தியை கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். சில ஆண்டுகள் காதலித்து வந்த இருவரும் திருமணத்துக்குப் பிறகு குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் பிரதீப் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

மனைவியை பிரிந்த பிரதீப் ஆண்டனி

குழந்தை பிறப்பதற்கு முன்பு தந்தையாகும் பொறுப்பு குறித்து தான் பெரிதாக யோசிக்கவில்லை என்றும், ஆனால் குழந்தை பிறந்த பிறகு அதனுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டதாகவும் பிரதீப் தெரிவித்துள்ளார். குழந்தையுடன் இருந்த ஒவ்வொரு நாளும் தனக்கு புதிய உணர்வை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், கடந்த ஒரு மாதமாக குழந்தை தன்னுடன் இல்லை என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

தவறான நபரை திருமணம் செய்துவிட்டேன்

தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய பிரதீப், இருவருக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டதாகவும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியாத சூழல் உருவானதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், “தவறான நபரை திருமணம் செய்துவிட்டேன்” என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாகவும், அந்த உறவு தன்னை ஒவ்வொரு நாளும் மோசமான நபராக மாற்றியதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். திருமண வாழ்க்கையில் தொடர்ந்து மூச்சுத்திணறுவது போல் உணர்வதால் அதிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பெற்றோர் தொடர்ந்து சண்டையிட்டு ஒருவரையொருவர் வெறுக்கும் சூழலில் குழந்தை வளர்வதைவிட, தாயுடன் இருப்பதே குழந்தைக்கு நல்லது என தான் கருதுவதாகவும் பிரதீப் தெரிவித்துள்ளார். குழந்தையை பிரிந்திருப்பது தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பிரதீப் ஆண்டனியின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், அவர் பின்னர் அதனை நீக்கினார். இதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில், தனிப்பட்ட விஷயத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தனது தவறு என்றும், அந்த நேரத்தில் ஏற்பட்ட உணர்ச்சியின் வெளிப்பாடாகவே அந்தப் பதிவு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

‘அருவி’, ‘வாழ்’, ‘தாதா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள பிரதீப் ஆண்டனி, ‘பிக்பாஸ் தமிழ் 7’ நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார். 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget