Prabhu Weight Loss: திடீரென எடை குறைந்த நடிகர் பிரபு... காரணம் இதுதானாம்!
சின்னத்தம்பி இரண்டாம் பாகம் உருவாக உள்ளது போலும் அதற்காகத்தான் குஷ்புவை போல பிரவும் உடல் எடையை குறைத்துவிட்டார் என முனுமுனுக்க தொடங்கிவிட்டனர்.
தமிழ் சினிமவின் 80 ,90களில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் பிரபு(Prabhu). பொதுவாக நடிகர்கள் என்றால் ஸ்லிம்மான தோற்றத்துடந்தான் இருக்க வேண்டும் என்பதை மாற்றியமைத்தவர் பிரபு. நடிகர் திலகம் சிவாஜியின் இரண்டாவது மகன் பிரபு. என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் தனித்திறமையால் மட்டுமே சினிமாவில் கோலோச்சினார். தற்போது தனக்கு பொருத்தமான குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபுவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகின. அதில் அவர் முன்பை விட உடல் எடை மெலிந்து காணப்பட்டார். அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு என்ன ஆயிற்று? என சரமாரியாக கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். இன்னும் சிலரோ சின்னத்தம்பி இரண்டாம் பாகம் உருவாக உள்ளது போலும் அதற்காகத்தான் குஷ்புவை போல பிரவும் உடல் எடையை குறைத்துவிட்டார் என முனுமுனுக்க தொடங்கிவிட்டனர்.
Director P.Vasu Sir Chandramukhi 2 Edukura Munna , Chinna Thambi 2 Edukalam 😁😍@khushsundar #Prabhu pic.twitter.com/LyjW67Bafy
— ஆண்டவனின் செல்லப்பிள்ளை 3.0 🕶 (@Revenge3_offi) September 26, 2021
பிரபு உடல் எடையை குறைத்ததற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்ச்செலவில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’(Ponniyin Selvan). இந்த படத்தில் பிரபு அநிருத்த பிரம்மராயர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காகத்தான் பிரபு பல கிலோ எடையை குறைத்தாராம். கொரோனா ஊரடங்கு சமயத்தில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அல்லவா. அந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரபு கடுமையாக உடற்பயிற்சி செய்து முற்றிலும் பழைய பிரபுவாக தோற்றமளிக்கிறார். பிரபுவின் கடின உழைப்பை கண்டு பலரும் மெச்சி வருகின்றன.
Fantastic Prabhu Sir 🔥❤️😍🥰 @iamVikramPrabhu #Prabhu pic.twitter.com/z6KiB3SJGC
— Actor Karthik Vijay (@KartigayanBala1) September 26, 2021
பொன்னியின் செல்வன் திரைப்படம் கல்கியின் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், கார்த்தி, பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், இனி போஸ்ட்-ப்ரொடக்ஷன் வேலைகளில் முழுவீச்சில் களமிறங்கப்போவதாகவும் படக்குழு அப்டேட் வெளியிட்டுள்ளது. இதனால், பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என தெரிகிறது. 'சம்மர் 2022’ என குறிப்பிடப்பட்டுள்ளதால், தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு உருவாகி வருகின்றது. எடிட்டிங் பணியை ஸ்ரீதர் பிரசாத் மேற்கொள்கிறார். ரவி வர்மன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக, பாதிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் புதுச்சேரியில் தொடங்கியது. இதனையடுத்து ஹைதராபாத்தில் பிரமாண்டமாக செட் அமைத்து நடந்து வந்த படப்பிடிப்பு, சமீபத்தில் நிறைவடைந்தது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.