Prabhu Deva on Aishwarya Rajinikanth: “பப்புவோட வேலை சூப்பராதான் இருக்கும்..” - ஐஸ்வர்யா ரஜினி பற்றி பிரபுதேவா ஷேரிங்ஸ்
3, வை ராஜா வை படங்களை அடுத்து இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் ஐஸ்வர்யா, இசைப்பாடலை இயக்குவதில் ஆர்வம் காட்டி இருக்கிறார்.
![Prabhu Deva on Aishwarya Rajinikanth: “பப்புவோட வேலை சூப்பராதான் இருக்கும்..” - ஐஸ்வர்யா ரஜினி பற்றி பிரபுதேவா ஷேரிங்ஸ் Prabhu Deva praises and congratulates on Aishwarya Rajinikanth and her upcoming album song Prabhu Deva on Aishwarya Rajinikanth: “பப்புவோட வேலை சூப்பராதான் இருக்கும்..” - ஐஸ்வர்யா ரஜினி பற்றி பிரபுதேவா ஷேரிங்ஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/11/f88e27d948109e1fc073a2ecc923b5a0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவுடன் தன்னுடைய புதிய பாடலான `பயணி’ படப்பிடிப்பில் கலந்துகொண்டார். எனினும், இந்த வாரம் காய்ச்சல், தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஷ்வர்யா. இந்நிலையில், அவர் இயக்கத்தில் உருவாகி வரும் இசைப்பாடலுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் பிரபுதேவா.
ஐஸ்வர்யா இயக்கி வரும் இசைப்பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. “சிங்கிள்ஸ்” எனப்படும் ஒற்றை இசைப்பாடலாக உருவாகி வருகிறது. இது குறித்து பேசி இருக்கும் பிரபுதேவா, “ஹாய் பப்பு.. உங்களுக்கெல்லாம் ஐஸ்வர்யா. எனக்கு அவங்க பப்பு. 9 வருஷம் கழிச்சு ஒரு சிங்கிள் இயக்கி இருக்காங்க. இப்போ சிங்கிள் பண்றதுதான் டிரெண்ட். ஐஸ்வர்யா ரொம்ப பார்த்து பார்த்து தேர்வு செய்யுறவங்க. நல்லா பண்ணிருக்காங்க. கண்டிப்பா இது சூப்பரா இருக்கும். இந்த டீமுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
பிரபுதேவாவின் வாழ்த்துகள்:
Thank you so much for all your love always Anna ! You are my inspiration @PDdancing 💜 pic.twitter.com/Sh0oXKjIGm
— Aishwaryaa.R.Dhanush (@ash_r_dhanush) March 10, 2022
3, வை ராஜா வை படங்களை அடுத்து இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் ஐஸ்வர்யா, இசைப்பாடலை இயக்குவதில் ஆர்வம் காட்டி இருக்கிறார். தனது இன்ஸ்டாவில், ”நீங்கள் அனைவரும் இதை பார்க்க வேண்டுமென ஆவலாய் காத்திருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.
View this post on Instagram
முன்னதாக, நடிகர் தனுஷ் - இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தம்பதி கடந்த ஜனவரி மாதம் தங்கள் பிரிவை அறிவித்த போது, அது பேசுபொருளாக மாறியது. சமூக வலைத்தளங்களில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இது குறித்து அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். விவகாரத்து செய்தியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த ஐஸ்வர்யா, “கேப்ஷன் தேவையில்லை என நினைக்கிறேன். உங்கள் அனைவரின் புரிதலும், அன்பும்தான் மிக தேவையானது” என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)