மேலும் அறிய

Salaar Postponed: பிரபாஸின் சலார் பட வெளியீடு ஒத்திவைப்பு..! அப்போ எப்போ ரிலீஸ்? ரசிகர்கள் அப்செட்..!

பிரபல நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் வரும் 23-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ் நடித்திருக்கும் சலார் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

சலார்

கே.ஜி.எஃப் இரண்டு பாகங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் தற்போது இயக்கியிருக்கும் படம் சலார். பிரபாஸ் , ஷ்ருதி ஹாசன் , ப்ரித்விராஜ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆதிபுருஷ் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து பிரபாஸின் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கும் படம் வெற்றியடையும் என எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.

கடந்த ஜூலை மாதல் 6 ஆம் தேதி சலார் படத்தின் டீசர் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது. மேலும் சலார் திரைப்படம் கே.ஜி எஃப் திரைப்படத்துடன்  தொடர்புடைய படமாக இருப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் இருப்பதால் ரசிகர்கள் இந்தப் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தாமதமாகும் ரிலீஸ்

சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்  படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படலாம் என சினிமா வட்டாரங்களில் பேச்சு எடுபட்டது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் படக்குழு சார்பில் இருந்து தெரிவிக்கப் டவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தார்கள்.

ரிலீஸ் எப்போது?

தற்போது சலார் திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஹாம்போலே ஃபிலிம்ஸ்  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளத் தகவலின் படி சலார் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகாது எனவும் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரியவந்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் “ சலார் திரைப்படத்திற்கு உங்களது அளவுகடந்த ஆதரவிற்கு நன்றி.

ஒரு சில எதிர்பாராக காரணங்களால் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக இருந்த சலார் திரைப்படம் ஒத்திவைக்கப் படுகிறது. ஒரு சிறந்த திரைப்பட அனுபவத்தை ரசிகர்களாகிய உங்களுக்கு வழங்குவதன் நோக்கத்தினால் மட்டுமே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. உயர்தரமான ஒரு அனுபவத்தைக் கொடுக்க எங்களது குழு முழு வீச்சுடன் வேலை செய்து கொண்டிருக்கிறது. படத்தின் உண்மையான ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் அதுவரை எங்களுடன் இருங்கள்.” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

படத்தில் பல்வேறு வி.எஃப். எக்ஸ் காட்சிகளின் பணி முழுமையடையாததே இந்த தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பிரபாஸ் நடித்து வரும் படங்கள்

சலார் திரைப்படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் மற்றொரு பிரம்மாண்டமான செலவில் உருவாகு படம் கல்கி2898. பிரபாஸ் , ரானா டகுபதி, கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இந்தப் படத்தை  நாக் அஸ்வி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget