மேலும் அறிய

Pan-Indian stars: ஓவர் நைட்ல பான்-இந்திய ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்கள்... பிரபாஸ் முதல் ஜெயம் ரவி வரை...   

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். கேஜிஎஃப் போன்ற படங்கள் மூலம் தென்னிந்திய சினிமாவை உலகளவில் பெரும் புகழையும் அங்கீகாரத்தையும் பெற்று ஒரே படத்தின் மூலம் பான் இந்தியன் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற நடிகர்கள் யார் யார். 

தென்னிந்திய சினிமா தற்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று வருகிறது. தென்னிந்திய சினிமாவை சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் முன்பு போல அல்லாமல் அங்கீகாரம் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் சமீப காலத்தில் ஒரே திரைப்படம் மூலம் சர்வேதச அளவில் கவனம் ஈர்த்தார் பல சூப்பர் ஸ்டார் நடிகர்கள் யார் யார் என்பதாலா தெரியுமா?

எந்த எல்லையையும் கடக்க முடியும் என்பதை எஸ்.எஸ். ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம் நிரூபித்து காட்டியது. பிளாக் பஸ்டர் திரைப்படமாக மட்டும் வெற்றி பெறாமல் தென்னிந்திய திரைப்பட துறையை எல்லையை  கடந்து உலக அளவில் பிரபலமாகி பான் இந்தியன் படம் என்ற புதிய சொல்லை அறிமுகப்படுத்தியது.

Pan-Indian stars:  ஓவர் நைட்ல பான்-இந்திய ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்கள்... பிரபாஸ் முதல் ஜெயம் ரவி வரை...   

பாகுபலி, புஷ்பா, ஆர்.ஆர்.ஆர். கேஜிஎஃப், காந்தாரா, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் இந்திய சினிமா வரலாற்றில் மேஜிக் செய்து தென்னிந்திய சினிமாவை பெருமைப்படுத்தி உலகளவில் பெரும் புகழையும் அங்கீகாரத்தையும் பெற்று கொடுத்துள்ளது. இப்படத்தின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு உலகளவில் ரசிகர் பட்டாளம் பெருகி கொண்டாட வைத்தது. அப்படி ஒரே படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர்கள் சிலர் பற்றி காணலாம். 

பிரபாஸ் - பாகுபலி :

பாகுபலி படம் வெளியாவதற்கு முன்னர் பிரபாஸ் என்ற ஒரு நடிகர் இருப்பதே வெளியில் தெரியாத அளவுக்கு இருந்தது. ஒரே இரவில் அவர் உலக அளவில் பிரபலமானார். அமரேந்திர பாகுபலியாக இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடினார்கள். பான் இந்தியா படமாக வெளியாகி மேஜிக் செய்தது. அதனை தொடர்ந்து பிரபாஸ் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவினாலும் அடுத்து அவரின் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய திட்டமாகவே எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜூனியர் என்டிஆர்- ஆர்ஆர்ஆர்:

செல்வாக்கு மிக்க திரைக்குடும்பம் மாற்றம் அரசியல் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தின் வாரிசான ஜூனியர் என்டிஆர் என்றுமே வெகுஜனங்களின் நாயகனாகவே கருதப்படுகிறார். தெலுங்கு திரையுலகில் நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய பின்னர் ஆதி, சிம்ஹர்டி, ராக்கி, அதர்ஸ் மற்றும் பல பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் எஸ்.எஸ். ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம். கொமரம் பீமாக ஜூனியர் என்டிஆரின் நடிப்பு அவரை தெலுங்கு திரையுலகிற்கு அப்பால் அடையாளம் காட்டியது. இந்தியா மட்டுமின்றி எல்லைகளைக் கடக்கவும் உதவியது. பல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் அவரைப் பாராட்டியதால், அவர் இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் பிரபலமாகிவிட்டார். 

Pan-Indian stars:  ஓவர் நைட்ல பான்-இந்திய ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்கள்... பிரபாஸ் முதல் ஜெயம் ரவி வரை...   

ராம்சரண் - ஆர்.ஆர்.ஆர் :

சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் , டோலிவுட்டில் ஒரு சிறந்த நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருந்தார். ரங்கஸ்தலம், மகதீரா போன்ற படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை நிரூபித்து முன்னணி நடிகரானார். இருப்பினும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் அல்லூரி சீதாராம ராஜுவாக இந்தியாவிற்கு வெளியே மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரானார்.  குட் மார்னிங் அமெரிக்கா, கேஎல்டிஏ என்டர்டெயின்மென்ட் மற்றும் பல ஹாலிவுட் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அளவிற்கு சர்வதேச ஸ்டார் ஆனார் ராம் சரண். ஹாலிவுட்டில் இருந்து கூட ஆஃபர்கள் கிடைக்கும் அளவுக்கு அவரின் ஸ்டேட்டஸ் உயர்ந்துவிட்டது.  

யாஷ்- கேஜிஎஃப் :

கேஜிஎஃப் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் யாஷ். கேஜிஎஃப் படம் வெளியாவதற்கு முன்னர் கன்னட திரையுலகம் தவிர அவரை வேறு யாருக்கும் தெரியாது. கேஜிஎஃப் படத்தில் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பான் இந்திய நடிகராக பிரபலமானார். அதனால் அவருக்கு கேஜிஎஃப் படத்தை விட பெரிய படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளததால் அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. 

Pan-Indian stars:  ஓவர் நைட்ல பான்-இந்திய ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்கள்... பிரபாஸ் முதல் ஜெயம் ரவி வரை...   

அல்லு அர்ஜுன்- புஷ்பா:

அல்லு அர்ஜுன் பிளாக் பஸ்டர் படமான புஷ்பா: தி ரைஸ் மூலம் தேசிய அளவில் புகழ் பெற்றார். ஆலா வைகுண்டபுரம்லூவுடன் படத்தில் இடம்பெற்ற புட்ட போம்மா மற்றும் ராமுலூ ராமுலா போன்ற பாடல்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். புஷ்பா படத்தில் அவரின் முரட்டுத்தனமான நடிப்பால் சர்வதேச நட்சத்திரமானார். தற்போது புஷ்பா 2 படத்தில் மீண்டும் புஷ்பா ராஜ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி- பொன்னியின் செல்வன் :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு பிறகு அருள்மொழி வர்மனாக பான் இந்திய நடிகர் அந்தஸ்தை பெற்றுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் 41 தொகுதிகளை பாஜக குறி வச்சுட்டாங்க.!அலறும் செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் 41 தொகுதிகளை பாஜக குறி வச்சுட்டாங்க.!அலறும் செல்வப்பெருந்தகை
TNPSC Group 2 Vacancy: அடிதூள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலியிடங்களை உயர்த்தி அறிவிப்பு- எவ்ளோ தெரியுமா?
TNPSC Group 2 Vacancy: அடிதூள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலியிடங்களை உயர்த்தி அறிவிப்பு- எவ்ளோ தெரியுமா?
Shashi Tharoor Vs Congress: பாஜகவுக்கு தாவும் சசி தரூர்.? மோடிக்கு ஒரே புகழாரம்.. காங்கிரசுக்குள் புகைச்சல்
பாஜகவுக்கு தாவும் சசி தரூர்.? மோடிக்கு ஒரே புகழாரம்.. காங்கிரசுக்குள் புகைச்சல்
Gaza Peace Plan: ட்ரம்ப்பின் காசா அமைதித் திட்டம்; தீர்மானத்தை அங்கீகரித்த ஐ.நா பாதுகாப்பு சபை; நராகரித்த ஹமாஸ்
ட்ரம்ப்பின் காசா அமைதித் திட்டம்; தீர்மானத்தை அங்கீகரித்த ஐ.நா பாதுகாப்பு சபை; நராகரித்த ஹமாஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்
Vaithiyalingam joins ADMK| ”வாங்க வைத்திலிங்கம்”EPS கொடுத்த அசைன்மெண்ட்அதிமுகவின் டெல்டா கணக்கு
மிரட்டி சாதித்த நிதிஷ்! பாஜக ப்ளான் FLOP! அடுத்த முதல்வர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் 41 தொகுதிகளை பாஜக குறி வச்சுட்டாங்க.!அலறும் செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் 41 தொகுதிகளை பாஜக குறி வச்சுட்டாங்க.!அலறும் செல்வப்பெருந்தகை
TNPSC Group 2 Vacancy: அடிதூள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலியிடங்களை உயர்த்தி அறிவிப்பு- எவ்ளோ தெரியுமா?
TNPSC Group 2 Vacancy: அடிதூள்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலியிடங்களை உயர்த்தி அறிவிப்பு- எவ்ளோ தெரியுமா?
Shashi Tharoor Vs Congress: பாஜகவுக்கு தாவும் சசி தரூர்.? மோடிக்கு ஒரே புகழாரம்.. காங்கிரசுக்குள் புகைச்சல்
பாஜகவுக்கு தாவும் சசி தரூர்.? மோடிக்கு ஒரே புகழாரம்.. காங்கிரசுக்குள் புகைச்சல்
Gaza Peace Plan: ட்ரம்ப்பின் காசா அமைதித் திட்டம்; தீர்மானத்தை அங்கீகரித்த ஐ.நா பாதுகாப்பு சபை; நராகரித்த ஹமாஸ்
ட்ரம்ப்பின் காசா அமைதித் திட்டம்; தீர்மானத்தை அங்கீகரித்த ஐ.நா பாதுகாப்பு சபை; நராகரித்த ஹமாஸ்
பனங்கற்கண்டு, வெல்லம் நல்லதா? பேலியோவில் இனிப்புக்கு ஏன் தடை? மருத்துவர் விளக்கம்!
பனங்கற்கண்டு, வெல்லம் நல்லதா? பேலியோவில் இனிப்புக்கு ஏன் தடை? மருத்துவர் விளக்கம்!
TVK Vijay : ‘விஜயுடன் மீண்டும், மீண்டும் பேசினாரா ராகுல்?’ நடந்தது என்ன..?
‘விஜயுடன் மீண்டும், மீண்டும் பேசினாரா ராகுல்?’ நடந்தது என்ன..?
சென்னையில் வேலை; விண்ணப்பிக்க அரசு அழைப்பு- என்ன தகுதி? எவ்வளவு சம்பளம்?
சென்னையில் வேலை; விண்ணப்பிக்க அரசு அழைப்பு- என்ன தகுதி? எவ்வளவு சம்பளம்?
MK STALIN: கோவையை மொத்தமாக தட்டி தூக்கணும்! செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு
கோவையில் ஒரு தொகுதியையும் விட்டு விட கூடாது...மொத்தமா தட்டி தூக்கணும்! செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் உத்தரவு
Embed widget