Pooja Hegde's Beat song: ஊ சொல்றியா சமந்தாவுக்கு வந்தாச்சு Tough ! பீட் சாங்குக்கு வந்த பீஸ்ட் நாயகி..
கதாநாயகியாக படு பிஸியாக இருந்தாலும் பீட் சாங் ஒன்றுக்கும் ஆட இருக்கிறார் பூஜா.
பீரியட் கேப்பிற்கு ஏற்ற மாதிரியாக ரசிகர்களின் ரசனையும் , நடிகைகளின் தேர்வும் மாறிவிகிறது. அந்த வகையில் 90’ஸ் கிட்ஸ், 2 கே கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்தமான நடிகையாகியிருக்கிறார் பூஜா ஹெக்டே. பூஜா தற்போது படு பிஸியாக தமிழ் , தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அவர் நடித்த பீஸ்ட் சமீபத்தில் வெளியானது. மேலும் சில படங்கள் இவரது நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான ராதே ஷ்யாம் திரைப்படத்தில் பிரபாஸுக்கும் , இவருக்குமான கெமிஸ்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படி கதாநாயகியாக படு பிஸியாக இருந்தாலும் பீட் சாங் ஒன்றுக்கும் ஆட இருக்கிறார் பூஜா.
View this post on Instagram
முன்பெல்லாம் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் என்றால் எதாவது கவர்ச்சி நடிகைகள் வந்து ஆடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் முன்னணி நடிகைகளே கவர்ச்சியை முன்னிலைப்படுத்தி நடனம் ஆடி வருகின்றனர். அதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஆட்டம்.பான் இந்தியாவாக பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது ஓ சொல்றியா பாடல்.
புஷ்பா படத்துக்கே அந்தப்பாடல்தான் அறிமுகம் கொடுத்தது என்றுக் கூட சொல்லலாம். அந்த அளவுக்கு மாபெரும் ஹிட் அடித்தது. சமந்தாவை தொடர்ந்து மேலும் சில நடிகைகளும் ஒரு பாடலுக்கு நடனமாடத் தொடங்கினர். தமன்னா, ரெஜினா, லட்சுமிராய் உள்ளிட்டோரும் ஒரு பாடலுக்கு நடனம் . ஆடினர். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் பூஜா.
View this post on Instagram
தெலுங்கில்தான் இந்த டான்ஸ் அரங்கேறவுள்ளது. தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் இணைந்து நடித்து வரும் F3 திரைப்படத்தில்தான் பூஜா ஒரு பாடலுக்கு நடனம் ஆட உள்ளதாகவும், இதற்காக அவர் பெரும் தொகையை சம்பளமாக வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் தமன்னா, மெஹ்ரின் பிர்ஜிதா மற்றும் அஞ்சலி ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.அனில்ரவிபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள F3 படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனம் ஆடியதாகவும்,ஓ சொல்றியா பாடலைப் போல இந்தப்பாடலும் மிகப் பெரிய அளவில் ஹிட்டாகும் என்றும் படக்குழுவினர் எதிர்பார்க்கப்படுகிறது