Ponniyin Selvan: ‘அகநக’ பாடலை பாடினால் இப்படியொரு பரிசா? ரசிகர்களுக்கு த்ரிஷா தரப்போகும் சர்ப்ரைஸ் என்ன?
Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றுள்ள ‘அகநக’ பாடலை சிறப்பாக பாடுபவர்களுக்கு ஸ்பெஷலான பரிசு ஒன்று காத்திருப்பதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி சுமார் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படம், பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி மற்றும் நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷமி, ஷோபித்தா துலிபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த மாதம் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘அகநக’ பாடல் வெளியானது.
'அகநக' பாடல்:
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் சக்திஸ்ரீ கோபாலனின் குரலில் வெளியாகியுள்ள அகநக பாடல்தான், பலரது ப்ளேலிஸ்டில் ரிப்பீட் மோடில் உள்ளது. இப்பாடலை இன்னும் கொஞ்சம் வைரலாக்கும் வகையில், பொன்னியின் செல்வன் படக்குழு ஒரு காரியத்தை செய்துள்ளது. பாென்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள த்ரிஷா, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் பின்வருமாறு பேசியுள்ளார்:
“எல்லாரும் அகநக பாடலை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அகநக பாடலை உங்களது குரலில் பாடி, அந்த வீடியோவை #Aganagacoverscontest என்ற ஹேஷ்டேக்கில் பதிவிடுங்கள். நான் அனைவரது பாடலையும் கேட்கப்போகிறேன். இதில் வெற்றி பெரும் அதிர்ஷ்டசாலிக்கு ஸ்பெஷலான பரிசு ஒன்று காத்துக்கொண்டு இருக்கிறது”
மேற்கண்டவாறு த்ரிஷா, தனது வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ, லைகா நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. த்ரிஷா தரப்போகும் பரிசு என்னவென்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
#AgaNaga fans! This one is for you! Post your covers with #AgaNagaCoversContest! Looking forward to hearing all your versions! A special prize awaits! #PS2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @IMAX @primevideoIN @trishtrashers @Karthi_Offl pic.twitter.com/eUBRWqnQDJ
— Lyca Productions (@LycaProductions) March 25, 2023
படத்திற்கான ப்ரமோஷன்:
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாக ரிலீஸின் போது, அப்படத்தின் நடிகர்கள் ‘சோழர்களின் பயணம்’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் சென்று ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். போதாக்குறைக்கு, நடிகர்களுக்கு படத்தில் என்ன கதாப்பாத்திரமோ, அதையே தங்களது சமூக வலைதள பக்கத்தின் பெயர்களாகவும் மாற்றிக்கொண்டு வித்தியாசமான முறையில் படத்திற்கு விளம்பரம் செய்தனர்.
பொன்னியின் செல்வன் 2 அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான ப்ரமோஷன் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. த்ரிஷாவின் மேற்கண்ட வீடியோவும் அதில் ஒன்று. சில நாட்களுக்கு முன்னர், நடிகை த்ரிஷாவும் நடிகர் கார்த்தியும் வந்தியத்தேவன்-குந்தவையாக ட்விட்டரில் மாறி மாறி ட்வீட்டில் பேசிக்கொண்டது ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகத்தின் வெற்றியை எட்டுமா இரண்டாம் பாகம்?
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு இந்தியா முழுவதும் பெருமளவில் எதிர்பார்ப்பு இருந்தது. சிறந்த வரலாற்று கற்பனை கதை எனக் கூறப்படும் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட கதை என்பதால், அந்த புத்தகத்தின் ரசிகர்களும் இப்படத்தை பெருமளவில் எதிர்நோக்கியிருந்தனர். படம் வெளியாகி, பலதரப்பட்ட ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் சுமார் 480 கோடி ரூபாய் அளவிற்கு பாக்ஸ் ஆபிஸ் வசூலை நிரப்பியது.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், வெளியவதற்கு முன்னதாகவே பெருமளவு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டது. இதனால், படமும் நிறைய வசூலை எட்டியது. இந்த வெற்றி இரண்டாம் பாகத்திலும் தொடருமா? பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.