மேலும் அறிய

Vijayakanth : 'விஜயகாந்தை நேரா பாத்தா செத்துடுவேன்..' : கண்ணீருடன் பேசிய பொன்னம்பலம்..

நடிகர் விஜயகாந்த் எனக்கு கடவுள் மாதிரி என்று மனம் உருகி பேசியுள்ளார் நடிகர் பொன்னம்பலம்.

நடிகர் விஜயகாந்த் எனக்கு கடவுள் மாதிரி என்று மனம் உருகி பேசியுள்ளார் நடிகர் பொன்னம்பலம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப் படங்களிலும் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து வைத்திருப்பவர் நடிகர் பொன்னம்பலம். கடைசியாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவருக்கு உடல்நலனில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. கடுமையான நிதி நெருக்கடி, மருத்துவ சிகிச்சை எனப் போராடிய அவருக்கு தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகினரும், கன்னட திரையுலகினரும் உதவி செய்திருந்தனர். இந்நிலையில் பொன்னம்பலம் தனக்கு உதவி செய்தவர்களை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து:

விஜயகாந்த் எனக்கு கடவுள்:

நடிகர் விஜயகாந்த் எனக்கு கடவுள் மாதிரி. அவர நான் இன்னும் நேரா சென்று பார்க்கவில்லை. அவர் இப்போது இருக்கும் உடல்நிலையில் அவரை நேரில் பார்த்தால் நான் செத்துவிடுவேன். ஏன்னா எனக்கு கொஞ்ச நாளா இதய நோய், சிறுநீரக நோய் இருக்கு. அவரைப் பார்த்தால் என் மனசு தாங்காது. ஒருத்தர் மேல பாசம் வைத்துவிட்டு அதுவும் அளவு கடந்த பாசம் வைத்துவிட்டாள் அவர்கள் உடல்நிலை மோசமாக இருக்கும்போது பார்க்க முடியாது. அதனால் தான் நான் அவரைப் பார்க்கவில்லை. விஜயகாந்த் நேர்மையானவர். அவர் தெய்வம். எல்லோருக்கும் உதவுக்கூடியவர். அவரு இப்போ நல்ல உடல் நலத்தோடு இருந்திருந்தால் அவர் தான் எனக்கு முதல் நபராக உதவியிருப்பார். என் வீட்டில் விஜயகாந்த் படம் மட்டும் தான் இருக்கு. அவர் என்னைக்கும் நல்லா இருக்கணும்.

சரத்குமார் சார்தான் வாடகையே கொடுத்தார்:
எனக்கு கிட்னி ஃபெய்லியர் என்று தெரிந்தவுடன் சரத்குமார் சாருக்கு தான் ஃபோன் பண்றேன். உடனே அவர் யோசிக்காம உதவினார். 6 மாசங்களுக்கு மேல் வீட்டு வாடகை கொடுத்தார். இன்னிக்கு வரைக்கும் அவர் தான் என்னை அண்டர்டேக் பண்ணியிருக்கிறார். ஒரு கட்டத்தில் நான் முழுவதுமாக வாஷ் அவுட் ஆகியிருந்தேன். என்னை கைதூக்கிவிட்டார்.

தனுஷ் என் மானத்தை காப்பாற்றினார்:

அப்புறம் தனுஷ் பற்றி நான் சொல்லியே ஆகணும். சரியான நேரத்தில் என் மானத்தை காப்பாற்றியவர். எனக்கு பேருதவி செய்தவர். அவரையும் எனக்கு உதவிய அனைவரையுமே நான் மகான் என்று தான் சொல்வேன். அதுபோல் பிரகாஷ் ராஜ் சார். ஒரு ஃபோன் தான் செய்தேன். என்னாச்சு பொன்னம்பலம் என்றார். ரேலா மருத்துவமனையில் இருக்கேன் என்றேன். உடனே ரூ.2 லட்சம் கொடுத்தார். 

Vijayakanth : 'விஜயகாந்தை நேரா பாத்தா செத்துடுவேன்..' : கண்ணீருடன் பேசிய பொன்னம்பலம்..

சிரஞ்சீவி பெரிய மனிதர்:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை பற்றி பேசியே ஆக வேண்டும். அவருக்கு நான் ஒரு முறை பிறந்தநாள் வாழ்த்து அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு அவர் எனக்கு தமிழில் நன்றி சொல்லியிருந்தார். அப்புறம் என் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அறிந்து ரூ.2 லட்சம் பணம் அனுப்பி உதவினார். அதுபோல் ஒரு ஆடியோ மெசேஜும் அனுப்பினார். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எனக்கு உதவி செய்யலாம் என்று கூறி என்னை வாழ்த்தியிருந்தார். அவர் பெரிய மனிதர்,

இவ்வாறு பொன்னம்பலம் நன்றி மறவாமல் பெரிய லிஸ்ட்டே கொடுத்தார். 

தலைப்பு செய்திகள்

இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
Meesaya Murukku 2 Review: பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிகோருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிகோருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
TVK-வின் அங்கீகாரத்தை Suspend செய்யுங்க.! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்- அலற வைக்கும் அதிமுக
TVK-வின் அங்கீகாரத்தை Suspend செய்யுங்க.! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்- அலற வைக்கும் அதிமுக
Chennai Electric Train : சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்.! செப்.26 TO அக்.3 வரை ரத்து செய்யப்படும் ரயில்கள் - பட்டியல் இதோ..
சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்.! செப்.26 TO அக்.3 வரை ரத்து செய்யப்படும் ரயில்கள் - பட்டியல் இதோ..
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
அலுவலகம் செல்ல பெஸ்ட்! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!
அலுவலகம் செல்ல பெஸ்ட்! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!
Embed widget