த்ரிஷாவை சைட் அடிச்சீங்களா? : திடீர் கேள்வியால் வெட்கப்பட்ட நடிகர்..

பல நாட்களுக்கு முன்பு விருது விழாவில் எடுக்கப்பட்ட த்ரிஷாவின் புகைப்படம் தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது

FOLLOW US: 

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை த்ரிஷா. நடிகைகளால் நீண்டகாலம் திரையுலகில் நிலைத்திருக்க முடியாது என்ற கருத்தை பொய்யாக்கியவர். சினிமாவில் பல ஆண்டுகளாக நாயகியாக ஜொலிக்கும் த்ரிஷாவுக்கு வயது வித்தியாசம் இன்றி ரசிகர்கள் உண்டு. தமிழில் முன்னணி நாயகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் த்ரிஷா. த்ரிஷாவை சைட் அடிச்சீங்களா? : திடீர் கேள்வியால் வெட்கப்பட்ட நடிகர்..

சமீப காலமாக நாயகி என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் நடிப்பை தொடர்ந்தே வருகிறார். இந்நிலையில் விருது விழா ஒன்றில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. வைரல் போட்டோவுக்கு காரணம் பிரபல நடிகர் ஜெயராமனின் மகன் காளிதாஸ். சமீபத்தில் வெளியான பாவக்கதைகள் படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் காளிதாஸ். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் மீன் குழம்பும், மண் பானையும் என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். 

காளிதாஸ், விருது விழா ஒன்றில் த்ரிஷாவுக்கு பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு அவரைப் பார்த்துக்கொண்டு இருப்பதுபோல இருக்கும் அந்த புகைப்படம் அப்போதே வைரலானது. அப்போதே தனது இஸ்டாவில் பகிர்ந்த காளிதாஸ் அந்த புகைப்படம் குறித்து சிலாகித்து பதிவிட்டு இருந்தார். மீம்களிலும் அந்த புகைப்படம் அதிகம் பயன்படுத்தப்பட்டது. சில நாள் ட்ரெண்டிங்கில் இருந்து காணாமல் போன அந்த புகைப்படம் தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. த்ரிஷாவை சைட் அடிச்சீங்களா? : திடீர் கேள்வியால் வெட்கப்பட்ட நடிகர்..

காளிதாஸிடம் ரசிகர் ஒருவர் அந்த புகைப்படத்தை பகிர்ந்து விருது விழாவில் நீங்கள் த்ரிஷாவை சைட் அடித்தீர்களா என்று விளையாட்டாக கேட்க, ம்ம்ம்.. அது வந்து.. என வெட்கத்தில் பூரித்துள்ளார் காளிதாஸ். இதனை தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் த்ரிஷா பகிரவே தற்போது வைரலாகியுள்ளது. த்ரிஷாவை சைட் அடிச்சீங்களா? : திடீர் கேள்வியால் வெட்கப்பட்ட நடிகர்..

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருவார் . தற்போது இன்ஸ்டா ஸ்டோரியாக அவர் ரத்ததானம் குறித்து பதிவிட்டுள்ளார். சென்னை எக்மோரில் உள்ள அசான் பள்ளியில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள ரத்ததானம் குறித்து அவர் பதிவிட்டுள்ளார். 19-ஆம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை ரத்ததானம் நடைபெறும் என்றும், ரத்ததானம் செய்து பிறரின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Tags: trisha kalidas jayaram kalidas jayaram trisha trisha kalidas jayaram

தொடர்புடைய செய்திகள்

20 years of Lagaan : 'இது எமோஷனல் டீம்’ - லகான் 20-ஆம் ஆண்டு மெமரியை இன்ஸ்டாவில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!

20 years of Lagaan : 'இது எமோஷனல் டீம்’ - லகான் 20-ஆம் ஆண்டு மெமரியை இன்ஸ்டாவில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!

இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !

இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !

"கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க.." - வருத்தத்தில் பிரபல நடிகை..!

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!