மேலும் அறிய

படப்பிடிப்பில் தனியாக உட்கார்ந்து அழுவேன்...ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹைன் பகிர்வு

அன்பில் அவன் படப்பிடிப்பு தளத்தில் தான் தனியாக உட்கார்ந்து பலமுறை அழுததாக ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹைன் தெரிவித்துள்ளார்

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் காதல், ஆக்‌ஷன் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துஸ்ஸமத், கதிர்பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ள நிலையில், விக்னேஷ் ராஜா, ஆர். கார்த்திகேயன், அசோக் செல்வன் ஆகியோர் திரைக்கதையை அமைத்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்துள்ளார். இந்நிலையில், ‘அன்பில் அவன்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இப்படத்துடனான தனது அனுபவம் குறித்து மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

படப்பிடிப்பில் அழுதேன்

அன்பில் அவன் படம் குறித்து பேசிய பீட்டர் ஹைன் மாஸ்டர் "34 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் நான், இதுவரை எந்தப் படத்திலும் இவ்வளவு தனிப்பட்ட முறையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டதில்லை . இந்தப் படத்தை என்னுடைய சொந்த நிறுவனத்தைப் போல நினைத்து முழுமையாக அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். படப்பிடிப்பின்போது பல தருணங்களில் தனியாக அமர்ந்து அழுதேன். வழக்கமாக ஆக்‌ஷன் காட்சிகளை தொழில்நுட்ப ரீதியாக மட்டுமே அணுகும்  நான், இந்தப் படத்தில் அவற்றை உருவாக்கும்போது எனது மனைவி மற்றும் வாழ்க்கையை நினைத்துக்கொண்டே உணர்வுப்பூர்வமாக பணியாற்றினேன்

மேலும், ‘அன்பில் அவன்’ திரைப்படம் வெறும் ஆக்‌ஷன் படம் அல்ல; உயிர் பிழைத்தல், காதல் மற்றும் பொறுப்பு ஆகியவற்றைப் பேசும் படம் . படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகள் இயல்பாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதில் படக்குழு கவனம் செலுத்தினேன்" என தெரிவித்தார். 

அசோக் செல்வன், அபினயா செல்வம் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் தனக்கு குடும்பம் போன்றவர்களாகிவிட்டதாகவும், தான் இருக்கும் வரை அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் பீட்டர் ஹெய்ன் கூறியுள்ளார். இந்தப் படத்தை பார்த்த பிறகு உண்மையான வாழ்க்கை, காதல் மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் அர்த்தத்தை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

‘அன்பில் அவன்’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
ரூ.8 கோடி சம்பளம் கேட்டேனா? விக்ரம் பட நடிகை விளக்கம்...
ரூ.8 கோடி சம்பளம் கேட்டேனா? விக்ரம் பட நடிகை விளக்கம்...
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Embed widget