July 4 Release : இது மிடில் கிளாஸ் வாரம்...July 4 திரையரங்கில் வெளியாகும் படங்கள் இதோ
July 4 Movie Release : சித்தார்த் நடித்துள்ள 3BHK , சிவா நடித்துள்ள பறந்து போ உள்ளிட்ட ஜூலை 4 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் தமிழ் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்

பறந்து போ
பேரன்பு படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கியுள்ள காமெடி டிராமா பறந்து போ. மிர்ச்சி சிவா , கிரேஸ் ஆண்டனி , அஞ்சலி , மிதுல் ரயான் , அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் தயாநிதி படத்திற்கு இசையமைத்துள்ளார். ராம் சிவா கூட்டணியில் ஃபேமிலி ஆடியன்ஸூக்கான படமாக உருவாகியுள்ளது பறந்து போ திரைப்படம். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ஜூலை 2 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது
3BHK
எட்டுத்தோட்டாக்கள் , குருதி ஆட்டம் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கியுள்ள திரைப்படம் 3BHK. சித்தார்த் , சரத்குமார் , தேவயானி , மீதா ரகுநாத் , சைத்ரா அச்சார் , யோகிபாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அம்ரித் ராம்நாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்கிற ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து உணர்வுப்பூர்வமாக படமா உருவாகியுள்ளது 3BHK. மாவீரன் படத்தை தயாரித்த அருண் விஸ்வா இந்த படத்தை தயாரித்துள்ளார். 3BHK படத்தின் டிரைலர் மக்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஜூராசிக் வெர்ல்டு ரீபர்த்
உலகளவில் பிரபலமான ஜூராசிக் பார்க் பட வரிசையில் தற்போது உருவாகியுள்ள படம் ஜூராசிக் வெர்ல்டு ரீபர்த் . கேரத் எட்வர்ட்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஸ்கார்லெட் ஜோஹன்சன், மஹர்ஷலா அலி, ஜொனாதன் பெய்லி, ரூபர்ட் நண்பர், மானுவல் கார்சியா-ருல்ஃபோ, லூனா பிளேஸ், டேவிட் ஐகோனோ, ஆட்ரினா மிராண்டா, பிலிப்பைன் வெல்ஜ், பெச்சிர் சில்வைன், எட் ஸ்க்ரீன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த வாரம் வெளியாக இருக்கும் 3 படங்களுமே பெற்றோர்கள் குழந்தைகளோடு சேர்ந்து திரையரங்கில் பார்க்கும் விதமான படங்களே. மூன்று படங்களுக்கும் பெரியளவில் வரவேற்பு இருந்து வரும் நிலையில் வசூலிலும் இந்த படங்கள் வெற்றிபெற்றும் என எதிர்பார்க்கலாம்





















