மேலும் அறிய

Pandian Stores : ஜீவாவும் ஓரம் கட்டுப்படுகிறாரா? அண்ணன்-தம்பி பாசம் எங்கப்போச்சு.. இது பாண்டியன் ஸ்டோர்ஸ் கலாய்

பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள், ஏன்பா ஜீவா என்ன செஞ்சாரு?, இப்படி செய்றீங்களே என்று கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜனார்த்தனனுக்கு உடல்நிலை சரியில்லாததையடுத்து, அவரது கடையை கவனித்துவருகிறார் ஜீவா. இந்நிலையில் யதார்த்தமாக யார் கேலி செய்தாலும் சீரியஸாக எடுத்து வருத்தமடைகிறார்.

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் இடம்பிடித்துவரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்- தம்பி பாசத்தையும், குடும்ப ஒற்றுமையையும் மையமாக வைத்து ஒளிப்பரப்பாகிவரும் இச்சீரியலைக் காண்பதற்கே ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக முல்லையாக நடித்த விஜே சித்ரா- கதிரின் ரொமான்ஸ் காட்சிகளைக்காண்பதற்கே அனைவரையும் சீரியலைத் தவறாமல் பார்ப்பார்கள். ஆனால் விஜே சித்ராவின் மரணத்தையடுத்து சீரியல் அந்தளவிற்கு ரீச் ஆகவில்லை.

Pandian Stores : ஜீவாவும் ஓரம் கட்டுப்படுகிறாரா? அண்ணன்-தம்பி பாசம் எங்கப்போச்சு.. இது பாண்டியன் ஸ்டோர்ஸ் கலாய்

இந்நிலையில்தான் தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தனத்திற்கு குழந்தைப்பிறப்பது போன்றும், கடைசி தம்பி கண்ணன் காதல் என கதைக்களம் நகர்ந்தது. இதற்கிடையில் தான்  மீனாவின் அப்பாவான ஜனார்த்தனன் எப்படியாவது குடும்பத்தைப்பிரித்து மீனாவை தன்னுடனே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இருந்தார். ஆனால் யார் என்ன செய்தாலும் பரவாயில்லை. அண்ணன்- தம்பி பிரியவே மாட்டோம் என்ற மனநிலையில் இருந்தனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்.

ஆனால் தனது தாயின் மரணத்திற்குக் காரணம், கண்ணன் – ஐஸ்வர்யாவின் திருமணம் தான் என்று குடும்பம் பிரிய ஆரம்பித்ததோடு, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து கண்ணனை ஒதுக்கிவைத்தனர்.  ஆனால் எப்படியாவது குடும்பத்துடன் சேர்ந்தே ஆக வேண்டும் என கண்ணன் பல முயற்சிகள் எடுத்த நிலையில் தற்போது அனைவரும் சேர்ந்துள்ளனர். இதற்கிடையில் தான் ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.

இந்த நேரத்தில் அவரால் குடும்பத்தை கவனிக்க முடியாது என்று சொன்னவுடனே, ஜனார்த்தனன் கடையை ஜீவா கவனிப்பார் என்று மூர்த்தி தனம் இருவரும் கூறி விடுகிறன்றனர். இதனையடுத்து மனம் ஏற்றுக்கொள்ளாத போதும் அண்ணனின் பேச்சை தட்டமுடியாமல் செல்கிறார். இருந்தப்போதும் அங்கு கடையில் இருக்கும் போது பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ்க்குச் செல்கிறார். அங்கு ஐஸ்வர்யா பேங்க் செல்கிறார். மூர்த்தி பில் போட்டுக்கொண்டு இருப்பதால் அங்கு ஜீவாவுக்கு வேலையே இல்லை. இதனால் வருத்தத்துடன் எனக்கு இங்கு வேலையே இல்லையா என்று மூர்த்தியிடம் கேட்க, இங்கு நீ இல்லை என்றால் எதுவும் நடக்காது என்று நினைச்சியா? என்று யதார்த்தமாக கேட்கிறார். ஆனால் ஜீவா இதை சீரியஸாக எடுத்துக்கொள்கிறார்.

இதனையடுத்து சாப்பிவதற்காக வீட்டிற்கு வரும் ஜீவாவிடம், நீ அங்கேயே சாப்பிட்டுவிடு, என்று சொன்னவுடன், நான் இல்லேன்னா யாருமே வருத்தப்படவில்லையா என்று கேட்டவுடன் அனைவரும் சிரிக்கின்றனர். இதனால் மிகுந்த மன வருத்தமடையும் ஜீவா, என்னைவிட்டு குடும்பம் பிரிகிறதா? இல்லை நான் ஓரம் கட்டப்படுகிறேனா? என்ற ஏக்கத்துடன் உள்ளது போல கதைக்களம் நகர்கிறது.

இதனைப்பார்த்த ரசிகர்கள், ஏன்பா ஜீவா என்ன செஞ்சாரு? இப்படி செய்றீங்களே என்று கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget