OTT Release This Week: ‘கொஞ்சம் சில் பன்னு மாப்பி..’காந்தாரா முதல் ப்ரின்ஸ் வரை..! இந்த வார ஓ.டி.டி. ரிலீஸ் லிஸ்ட்..
OTT Release This Week: இந்த வாரத்தில், சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அதன் பட்டியல் இதோ..
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஆஹா, டிஸ்னி ஹாட்ஸ்டார் என இப்போது பல ஓடிடி தளங்கள் வந்துவிட்டது. திரையரங்குகளை விட, வீட்டில் இருந்து ஓடிடியில் படங்கள் பார்ப்பதை பலரும் விரும்புகின்றனர். அப்படி, இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் லிஸ்டை இங்கே காண்போம்.
காந்தாரா-அமேசான் ப்ரைம்
ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான படம் காந்தாரா. சத்தமே இல்லாமல் ரிலீஸான இப்படம், நல்ல கதையம்சத்தை கொண்டிருந்ததால், பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. தமிழிலும் நல்ல வசூலைப் பெற்றது. இப்படம், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகிறது. சினிமா ரசிகர்கள்..விஷூவல் ட்ரீட்டிற்கு தயாராகுங்கள்!
View this post on Instagram
ச்சுப் ரிவெஞ்ச் ஆஃப் ஏன் ஆர்டிஸ்ட் (Chup: Revenge of an artist)-ஜீ-5
மலையாள நடிகர் துல்கர் சல்மானின் முத்திரை பதிக்கும் ஆக்டிங்கில் உருவான படம் ச்சும் ரிவெஞ்ச் ஆஃப் ஏன் ஆர்டிஸ்ட். இதில், த்ரில்லர் பாணியில் உருவான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம், ஜீ-5 ஓடிடி தளத்தில் வரும் 25 ஆம் தேதி வெளியாகிறது. த்ரில்லர் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டு தான்..
மீட் க்யூட்-சோனி லைவ்
தெலுங்கு நடிகர் நானி, தமிழ் நடிகர் அஸ்வின் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள ஆந்தாலஜி படம்தான் மீட் க்யூட்.
View this post on Instagram
இப்படத்தை நானியின் சகோதரி, தீப்தி கண்டா இயக்கியுள்ளார். இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைப்பெற்றது. இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகர் அஸ்வின் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம், சோனி லைவ் தளத்தில் இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாகிறது.