மேலும் அறிய

Past Lives: ஆஸ்கர் இல்லனா என்ன, இதுதான் எனக்கு பிடித்த படம்! பாஸ்ட் லைவ்ஸ் படத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்!

Past Lives: பாஸ்ட் லைவ்ஸ் படத்துக்கு விருது கிடைக்காதது குறித்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்

கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட பாஸ்ட் லைவ்ஸ் (Past Lives) படத்திற்கு விருது கிடைக்காதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

பாஸ்ட் லைவ்ஸ் (Past Lives)

கொரியாவைச் சேர்ந்த அமெரிக்க நாடக எழுத்தாளரான செலின் சாங்கின் முதல் முழு நீள திரைப்படமான ‘பாஸ்ட் லைவ்ஸ்’ ஆஸ்கர் விருதுகளுக்கு இரண்டு பிரிவுகளில் தேர்வாகி உள்ளது.

கொரியாவை  சேர்ந்த அமெரிக்க நாடக எழுத்தாளரான செலின் சாங் இயக்கத்தில் க்ரிடா லீ, டீயோ யூ மற்றும் ஜான் மகரோ நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பாஸ்ட் லைவ்ஸ்’. கொரிய - அமெரிக்க திரைப்படமாக உருவாகிய பாஸ்ட் லைவ்ஸ், கடந்த 2023 ஆம் வருடம் ஜூலை 7ஆம் நாள் இந்தியாவில் வெளியானது.

கதைக்கரு :

பள்ளிப் பருவத்தில் ஒருவர் மேல் ஒருவர் ஈர்ப்புடைய குழந்தைகள் இருவர் நா யங் (டீயோ யூ ) மற்றும் ஹே சங் (க்ரிடா லீ), சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக வெவ்வேறு நாடுகளுக்குப் பிரிந்து விடுகிறார்கள். ஹே சங்கின் குடும்பம் கொரியாவிலிருந்து கனடாவிற்கு குடிபெயர்கிறது. அதன் பிறகு 12 ஆண்டுகளுக்கு பிறகு இணையத்தின் வழியே சந்தித்து கொள்ளும் இருவரும் சில காரணங்களால் மீண்டும் ஒருவருடன் ஒருவர் கொண்ட தொடர்பை துண்டித்துக் கொள்கின்றனர்.

அடுத்த 12 ஆண்டுகளில் பல மாற்றங்கள் நடந்து விடுகிறது. நோரா என்று பெயர் மாற்றிக் கொண்ட ஹே சங் (க்ரிடா லீ), ஆர்த்தரை ( ஜான் மகரோ) திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். பின்னொரு நாளில் நியூயார்கில் சந்திக்கும் நோரா மற்றும் நா யங் இருவரும் சேர்கிறார்களா? ஹே சங் மற்றும் ஆர்தரின் திருமண உறவுக்கு பாதிப்பு ஏற்பட்டதா? என்பதே திரைப்படம்.

]உணர்ச்சி மிகுந்த வசனங்கள் மனதை உருக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது சிறப்பு. படத்தில்  கதை நகரும் வேகம் சற்றே மெதுவாக இருந்தாலும் உணர்ச்சிப்பூர்வமான கதையையும் ஆழமான மணவோட்டங்களையும் சிறப்பாக காட்சிப்படுத்தி கவர்ந்திருப்பார் இயக்குநர் சாங். மொத்ததில் கொரியன் வாசனை மாறாமல் எடுக்கப்படிருக்கும் அமெரிக்க திரைப்படமான ’பாஸ்ட் லைவ்ஸ்’, காதல் திரைப்படப் பிரியர்களுக்கு நல்ல ஒரு உணர்ச்சிகரமான விருந்தாகவே இருந்தது.

வருத்தத்தில் ரசிகர்கள்

உலகின் பல நாடுகளில் நடைபெற்ற ஃபிலிம் ஃபெஸ்டிவல்களில் பாஸ்ட் லைவ்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டு ரசிகர்கள் மற்றும் விசர்சகர்களின் பாராட்டுகளை பெற்றது. மேலும் பாஸ்ட் லைவ்ஸ், Gotham Independent Film Awards, Women Film Critics Circle Awards, New York Film Critics Online Awards உள்ளிட்ட பல விருதுகளையும் வென்று குவித்துள்ளது. நடந்து முடிந்துள்ள ஆஸ்கரில் சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் செலின் சாங் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

இந்த விருதுக்குத் தேர்வாகிய முதல் ஆசியப் பெண் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் இந்த நிச்சயம் வெல்வான் என்று ரசிகர்கள் நம்பி வந்தனர். இந்நிலையில் சிறந்த திரைக்கதைக்கான விருதை “அனாடமி ஆப் ஏ ஃபால்” படத்திற்கா ஜஸ்டின் ட்ரையட் மற்றும் ஆர்தர் ஹராரி வென்றனர். இதனால் பாஸ்ட் லைவ்ஸ் படத்தின் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget