Celebrities Onam Celebration: அடிப்பொலி ஓணம்... மாஸ் காண்பித்த நடிகர்கள்... க்யூட் சொல்ல வைத்த நடிகைகள்... ஃபோட்டோ கலெக்ஷன்!
இந்த ஆண்டு நடிகைகளுக்கு இணையாக மலையாள நடிகர்கள் தங்கள் ஓணம் ஸ்பெஷல் உடைகளாலும் பதிவுகளாலும் இணையதளத்தில் மாஸ் காண்பித்து ரசிகர்களின் இதயங்களை அள்ளி வருகின்றனர்.
கேரள மாநிலத்தவர் கொண்டாடும் முக்கியப் பண்டிகையான ஓணம், இன்று உலகம் முழுவதும் உள்ள கேரள மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக தங்கள் வாசல்களில் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து இந்த பண்டிகையை சாதி, மதம் கடந்து மலையாளிகள் ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கி இன்று வரை 10 நாள்கள் ஓணம் கொண்டாடப்பட்டு வருகிறது. 10ஆம் நாளான இன்று திருவோண நட்சத்திரத்தில் திருவோண பண்டிகை நாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
வழக்கமாக ஓணம் வந்துவிட்டாலே கேரள புடவை அணிந்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடி நடிகைகள் சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளுவது வழக்கம்! இவர்களுக்கு போட்டியாக இந்த ஆண்டு நடிகைகளுக்கு இணையாக மலையாள நடிகர்கள் தங்கள் ஓணம் ஸ்பெஷல் உடைகளாலும் பதிவுகளாலும் இணையதளத்தில் மாஸ் காண்பித்து ரசிகர்களின் இதயங்களை அள்ளி வருகின்றனர். அவர்களின் புகைப்படங்களை பார்க்கலாம்!
தங்கள் செல்ல நாய்க்குட்டிகளுடன் கீர்த்தி சுரேஷ், நஸ்ரியா ஆகியோர் ஓணம் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
பெட் லவ்வர்களான கீர்த்தி சுரேஷ், நஸ்ரியா இருவரது புகைப்படங்களும் இதயங்களை அள்ளி வருகின்றன.
மலையாள திரை உலகின் உச்ச நட்சத்திரங்களான நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் புகைப்படங்கள் வீடியோக்கள் பகிர்ந்து ஓணம் வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் துல்கர் சல்மான் தன் ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்து வித்தியாசமான ஓணம் உடையில் லைக்ஸ் அள்ளி வருகிறார்.
நடிகர் பிரித்விராஜ் குடும்பத்துடன் ஓணம் கொண்டாடி, சதயா விருந்து உண்ணும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
கலக்கலான ஷர்ட், வேட்டியில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் புகைப்படம் பகிர்ந்துள்ளார்.
நடிகை மஞ்சு வாரியர் க்யூட்டான பாவடை, சட்டையில் புகைப்படம் பகிர்ந்து ரசிகர்களை வியக்க வைத்து லைக்ஸ் அள்ளி வருகிறார்.
நடிகை நதியா குடும்பத்துடன் ஓணம் கொண்டாடி புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார்.
அத்தப்பூ கோலமிட்டு, சதயா விருந்து உண்ணும் புகைப்படத்தை நடிகை அப்ர்ணா தாஸ் பகிர்ந்துள்ளார்.