மேலும் அறிய

STR 47 | எரியும் தீக்குச்சி.. அப்டேட்டோடு அசத்தும் கெளதம் - சிம்பு திரைப்படம்..!

சிம்பு - கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்துள்ள படத்தின் அப்டேட்டை தெரிவித்துள்ளது படக்குழு

மாநாடு படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் சிம்பு  தற்பொழுது கௌதம் வாசுதேவ் மேனனுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்.  விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா  போன்ற படங்களை தொடர்ந்து கவுதம் வாசுதேவ் மேனன் - சிம்பு மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். தற்போது உருவாக உள்ள இந்த புதிய படத்தின் பெயர் “நதிகளிலே நீராடும் சூரியன்” என வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் அப்டேட்டை தெரிவித்துள்ளது படக்குழு. இது குறித்து பதிவிட்டுள்ள நடிகர் சிம்பு,  எல்லா வல்ல இறைவனின் ஆசியின்படி, கௌதம் மேனன் இயக்கும், ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் #STR47 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நாளை மதியம் 12.15க்கு வெளியாகும். என தெரிவித்துள்ளார். தீப்பற்றி எரியும் தீக்குச்சி புகைப்படத்துடன் கூடிய ஒரு போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். சிம்புவின் பதிவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

STR 47 | எரியும் தீக்குச்சி.. அப்டேட்டோடு அசத்தும் கெளதம் - சிம்பு திரைப்படம்..!

இது தவிர கன்னடத்தில் வெளியான ஹிட் படமான மஃப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு . ஏற்கனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், படத்தை விரைந்து முடிக்க இயக்குநர் கிருஷ்ணா வேலைகளை முடுக்கிவிட்டுள்ளாராம்.

கோகுல் இயக்கத்தில் ’கொரோனா குமார்’ என்ற  படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் வட சென்னை இளைஞராக சிம்பு வலம் வருவார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , கார்த்தி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான காஷ்மோரா, ரௌத்திரம் உள்ளிட்ட  படங்களை இயக்கியவர்தான் ‘கொரோனா குமார்’ படத்தின் இயக்குநர் கோகுல் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ‘ சுமார் மூஞ்சு குமார்’ என்ற விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது. இதனை அடிப்படையாக கொண்டுதான் ‘கொரோனா குமார்’ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நடிப்பது மட்டுமின்றி, யுவன் உருவாக்கியுள்ள ஆல்பம் சாங் ஒன்றில் ,சிம்பு பாடல் பாடியுள்ளார். இந்த ஆல்பம் பாடலில் , காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பாடலில் இடம்பெறும் நடன காட்சிகளை பிக்பாஸ் புகழ் சாண்டி மாஸ்டர் இயக்கியுள்ளார். தற்போது எடிட்டிங் பணியில் உள்ள பாடல் விரைவில் யுவனின் யுடியூப் பக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிம்பு இசையமைப்பாளராகவும், பாடகராகவும் களமிறங்கியிருந்தார். அதன்பிறகு சிறு சலசலப்பு ஏற்படவே , மீண்டும் உடல் எடை குறைத்து முழு மூச்சில் நடிப்பில் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget