மேலும் அறிய

HBD Nelson Dilipkumar: ஆறே ஆண்டுகளில் நான்கு தொடர் வெற்றி படங்கள்!  படிப்படியாக முன்னேறிய நெல்சன் திலீப்குமார் பிறந்தநாள் இன்று!

HBD Nelson Dilipkumar : தமிழ் சினிமா ரசிகர்களின் நம்பிக்கையை பெற்ற மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் நெல்சன் திலீப்குமார் பிறந்தநாள் இன்று.  

இன்றைய தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன் திலீப்குமார். விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை  இயக்கி வந்த நெல்சனுக்கு திரைப்படம் இயக்க வேண்டும் என கனவு இருந்தது. அந்த கனவு நோக்கிய அவரின் பயணம் தான் இன்று அவரை தமிழ் திரையுலகிலின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக முன்னேற ஏணி படியாய் அமைந்துள்ளது. இந்த ட்ரெண்டிங் இயக்குநரின் 40வது பிறந்தநாள் இன்று. 

HBD Nelson Dilipkumar: ஆறே ஆண்டுகளில் நான்கு தொடர் வெற்றி படங்கள்!  படிப்படியாக முன்னேறிய நெல்சன் திலீப்குமார் பிறந்தநாள் இன்று!

கோலமாவு கோகிலா :

2018ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களின் கவனத்தை பெற்று வெற்றி பெற்றது. அதன் மூலம் நெல்சன் திலீப்குமாருக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. யோகி பாபுவின் காமெடி படத்தின் ஹைலைட். ரசிகர்கள் வித்தியாசமான ஒரு நயன்தாராவை ரசித்தனர். முதல் படமே நார்வே பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றது.

டாக்டர் :

2021ம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இயக்கிய 'டாக்டர்' திரைப்படம் மூலம் அவருக்குள் இருக்கும் டார்க் காமெடி திறமையை வெளிக்கொண்டு வந்தது. அப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. 

HBD Nelson Dilipkumar: ஆறே ஆண்டுகளில் நான்கு தொடர் வெற்றி படங்கள்!  படிப்படியாக முன்னேறிய நெல்சன் திலீப்குமார் பிறந்தநாள் இன்று!

பீஸ்ட் :  

அடுத்து நடிகர் விஜய்யை வைத்து அவர் இயக்கிய 'பீஸ்ட்' திரைப்படத்திற்கு பிறகு அவர் மீது இருந்த எதிர்பார்ப்பு பல மடங்காக எகிறியது. இயக்குநராகிய மூன்றாவது திரைப்படமே தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமான விஜய்யை இயக்கும் வாய்ப்பை பெறும் அளவுக்கு வளர்ச்சி கண்டார். ஆனாலும் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமே கொண்டாட வைத்தது. சில விமர்சனங்களும் வந்தது. 

ஜெயிலர் :

அதையும் கடந்து கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கினார். அப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. சூப்பர்ஸ்டாருக்கு ஒரு நல்ல கம்பேக் படமாகவும் அமைந்தது. இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மாரிமுத்து, யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர திரைபட்டாளத்தை இயக்கி இருந்தார்.  

பாக்ஸ் ஆபீசில் சாதனை செய்த ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது 'ஜெயிலர் 2' படத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

ஆறே ஆண்டுகளில் நான்கு திரைப்படங்களை தொடர் வெற்றிப்படங்களாக கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் நம்பிக்கையை சம்பாதித்த ஒரு இயக்குநராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் நெல்சன் திலீப்குமார். தனது வெற்றியின் அடுத்த படியாக 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். 

மேலும் மேலும் தன்னுடைய திரைப்பணயத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல சாதனைகளை செய்ய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தலைப்பு செய்திகள்

மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
ரூ.8 கோடி சம்பளம் கேட்டேனா? விக்ரம் பட நடிகை விளக்கம்...
ரூ.8 கோடி சம்பளம் கேட்டேனா? விக்ரம் பட நடிகை விளக்கம்...
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Embed widget