Nayanthara Vignesh Diwali : ஹேப்பி தீபாவளி.. செல்லக் குழந்தைகளை கையில் ஏந்தி நயன் - விக்கி வாழ்த்து.. வைரல் வீடியோ..
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இருவரும் ஐரோப்பிய நாடுகளுக்கு தேன் நிலவிற்கு சென்று திரும்பிய பிறகு இருவரும் அவரவர் வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்தனர்.
திடீர் செய்தி சொன்ன நயன்-விக்கி :
இந்த நிலையில் நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ள போகிறார். அதனால் வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை போன்ற தகவல்கள் வெளியாகின. அந்த சமயத்தில் திடீரென கடந்த 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என்ற அதிகாரபூர்வமான தகவலை சோஷியல் மீடியா மூலம் அறிவித்து அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் அவர்கள் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டது தெரிய வந்தது.
View this post on Instagram
வாடகை தாய் குறித்து விசாரணை :
இந்த நிலையில் இது குறித்து ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு பிறகே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். திருமணமாகி சில மாதங்களே ஆன நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், நயன் விக்கி தம்பதி கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில், குழந்தை பெறும் ஒப்பந்தத்தை பதிவு செய்து விட்டதாவும், அதுகுறித்தான ஆதாரங்களை விசாரணை குழுவிடம் சமர்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அத்துடன் தாங்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததற்கான ஆதாரங்களையும் அவர்கள் சமர்பித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.