Nayanthara’s Private Jet: ரூ.50 கோடியில் ஜெட் விமானம், 3 சொகுசு கார்கள், ரூ.100 கோடி வீடு என கெத்து காட்டும் நயன்தாரா
நயன்தாராவின் ஜெட் மதிப்பு ரூ.50 கோடி என்றும், அதை 50 நொடிகளுக்கு வாடகை விட ரூ.5 கோடி வரை கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.
Nayanthara’s private jet: ஜவான் படத்தின் மூலம் டிரெண்டிங்கில் இருக்கும் நயன்தாராவின் ஆடம்பர வாழ்க்கை குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாரா தனது ஜெட் விமானத்தை 50 விநாடிகளுக்கு வாடிகைக்கு விட ரூ.5 கோடி வரை கட்டணமாக பெறுவதாகவும், அவரது சொத்து மதிப்பு ரூ.200 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தரா, சந்திரமுகி, பில்லா உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானார். பின்னர், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து சோலோ கேரக்டர்களில் அசத்தினார். ஆக்ஷன்களிலும் அதிரடி காட்டிய நயன்தாரா தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பிறகு இந்தியில் அறிமுகமான நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படத்தில் நடித்துள்ளார். ஷாருக்கானுடன் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் அசத்திய நயன்தாரா பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார். நடிப்பு மட்டும் இல்லாமல் பிசினசிலும் ஆல்ரவுண்டராக வலம் வரும் நயன்தாரா சொத்து மதிப்பிலும் கெத்து காட்டி வருகிறார். விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். சாய் வாலா என்ற டீ விற்பனை நிறுவனத்துடன் பங்குதாரராக இணைந்துள்ளார். லிப் பாம் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நயன்தாரா வைத்திருக்கும் ஜெட் விமானம் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாராவின் ஜெட் மதிப்பு ரூ.50 கோடி என்றும், அதை 50 நொடிகளுக்கு வாடகை விட ரூ.5 கோடி வரை கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் தென்னிந்தியாவிலேயே சொந்தமாக ஜெட் வைத்திருக்கும் நடிகையாக நயன்தாரா உள்ளார். வட மாநிலங்களில் ஷில்பா ஷெட்டி, மாதுரி தீக்ஷிட், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் சொந்தமாக ஜெட் விமானங்களை வைத்துள்ளார்.
ஜெட் விமானம் மட்டும் இல்லாமல் கோடிகளில் மதிப்புடைய கார்களையும் நயன்தாரா சொந்தமாக வைத்துள்ளார். ரூ.1.76 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் ஜி.எல்.எஸ் 350 டி, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் உள்ளிட்ட சொகுசு கார்களும் நயன்தாராவிடம் உள்ளன. இது மட்டும் இல்லாமல் சென்னையில் ரூ. 100 கோடி மதிப்புள்ள சொகுசு வீட்டில் விக்னேஷ் சிவனுடன் வாழ்ந்து வருகிறார்.
மேலும் படிக்க: Chithha Movie Review: நெகிழ வைக்கும் உண்மைக்கதை... சித்தார்த் நடித்திருக்கும் 'சித்தா' திரை விமர்சனம்!