மேலும் அறிய

Netrikann Sneak Peek | வெங்காய பஜ்ஜியை கண்டுபிடிக்கும் நயன்தாரா... நெற்றிக்கண் முன்னோட்டத்தில் சுவாரஸ்யம்!

சமீபத்தில் வெளியிடப்பட்ட நெற்றிக்கண் படத்தின் டிரைலர் யூடியூப் பக்கத்தில் 6.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் ஒடிடி வெளியீட்டிற்கு தயாராக உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’ . இந்த திரைப்படத்தை ‘ அவள்’ என்ற ஹாரர் படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார் . இந்த திரைப்படத்தில்  நயன்தாரா பார்வை குறைபாடு உள்ளவராக நடித்திருப்பதாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பிரபல ஹாட் ஸ்டார்  நிறுவனம் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. மிரட்டும்  சைக்கோ த்ரில்லர் கதைக்களத்துடன்  எடுக்கப்பட்டுள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் அப்டேட்  குறித்து தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பிவந்த நிலையில் படத்தின் டிரைலரை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர்.  நெற்றிக்கண் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 13 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.இதன் டிரைலர்  தற்போது 6.3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் படத்தின் முன்னோட்ட காட்சியான 'sneak peek' ஐ  படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 



படத்தில் நயன்தாரா துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்ட முன்னோட்ட காட்சியில் தான் பயணித்த வாகனத்தின் ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்து குறித்து விளக்குகிறார் துர்கா. அவர் ஒரு பார்வை குறைபாடு உள்ளவர் என்பதால் அதனை காவலர் அலட்சியம் செய்ய, அவரை வியப்பில் ஆழுத்தும் விதமாக குற்றவாளியின் சில அடையாளங்களை குறிப்பிடுகிறார். இப்படியாக சஸ்பன்ஸ் நிறைந்த காட்சிகளுடன் நெற்றிக்கண் படத்தின் 'sneak peek' அமைந்துள்ளது.நெற்றிக்கண் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 13 அன்று  ஒடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. முன்னதாக படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை காரணமாக அந்த முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டன.ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படத்திற்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுப்பதால், இந்த படத்தை ஒடிடியில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. படத்தில் நயன்தாராவுடன்  அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கான திகில் இசையை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்து கொடுத்துள்ளார்.

 

நயன்தாராவின் நெற்றிக்கண் படம் தவிர்த்து , ரஜினியுடன் அண்ணாத்த , விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களும் கிட்டத்தட்ட வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. நயன்தாரா அறிமுக இயக்குநர் விக்னேஷ் என்பவரது இயக்கத்தில் தற்போது ஹாரர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .விக்னேஷ் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் . பெயர் வைக்கப்படாத அந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கி உள்ளது.  இந்த படத்தின் ஷூட்டிங்கை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஃபேமிலி என்டேர்டைன்மெண்டோடு திகிலாக இந்த படம் உருவாகி வருகிறது. நயன்தாரா ஏற்கனவே மாயா, ஐரா, டோரா உள்ளிட்ட திகில் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியுடன் நயன்தாரா உரையாடும் காட்சியில் போலீஸ் அதிகாரி வெங்காய பஜ்ஜி சாப்பிட்டதை, பார்வைதிறன் அற்ற நயன்தாரா கண்டுபிடித்து விடுகிறார். அவரது அபார ஆற்றலை தெரிவிக்கும் விதமாக இந்த காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

தலைப்பு செய்திகள்

Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget