மேலும் அறிய
Advertisement
Nayanthara Christmas Celebration: குழந்தைகளுடன் கியூட் போஸ் - உயிர், உலகுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்-விக்கி ஜோடி
Nayanthara Christmas Celebration: விக்னேஷ் சிவன், நயன்தாரா கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Nayanthara Christmas Celebration: தனது இரு இரட்டை மகன்களான உயிர், உலகுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை நயன்தாரா கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா ரஜினி, விஜய், அஜித், ஷாருக்கான் என முன்னணி ஹீரோக்களுக்கு ஹீரோயினாக நடித்ததுடன், தனித்துவமான படங்களிலும் நடித்து ரசிகர்களால் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோயினாக நடித்து வரும் நயன்தாரா தான் நடித்த நானும் ரவுதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தை தொடர்ந்து வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு நயன்தாரா தாயானார். தனது இரட்டை குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயர் வைத்த நயன்தாரா, அடிக்கடி சமூக வலைதளங்களில் அவர்களது புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். அண்மையில் இன்ஸ்டகிராமில் இணைந்த நயன்தாரா, முதல் முறையாக தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்தார்.
View this post on Instagram
தொடர்ந்து ஓணம் பண்டிகை கொண்டாட்டம், பிறந்த நாள் கொண்டாடம் என ஒவ்வொரு புகைப்படங்களாக இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
View this post on Instagram
அந்த வகையில், இன்று தனது உயிர், உலக், கணவன் விக்னேஷ் சிவன் மற்றும் அம்மாவுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை நயன்தாரா பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், குழந்தைகள் மற்றும் அவரது அம்மா என அனைவரும் சிகப்பு நிற ஆடையில் அழகாக போஸ் கொடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: Ajithkumar: “லேட்டா வந்ததுக்கு சாரி” - அஜர்பைஜானில் பிரபல ஹீரோயினிடம் மன்னிப்பு கேட்ட அஜித்..!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion