Nayanthara With Samantha : சமந்தாவிற்கு கேக் ஊட்டிய நயன்தாரா...! கடவுளுக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்..!
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்பட படப்பிடிப்பின்போது நயன்தாரா சக நடிகையான சமந்தாவிற்கு கேக் ஊட்டும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்து வருகின்றனர். படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பின்போது சமந்தாவிற்கு நயன்தாரா கேக் ஊட்டும் புகைப்படத்தை விக்னேஷ்சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
மேலும், இந்த புகைப்படத்திற்கு கீழே” காத்துவாக்குல ரெண்டு காதல்..! இதை சாத்தியப்படுத்திய கடவுளுக்கு நன்றி.! அளவற்ற திறமைசாலிகளுடன் பணிபுரிந்துள்ளேன்.. அதிக திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒவ்வொரு இயக்குனரின் கனவு. இதை விட ஒரு சிறந்த கூட்டணி என்னுடைய கதைக்கு இருக்கும் என்று சொல்லவே முடியாது.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்