National Film Awards 2023: மாஸ் காட்டிய திரைப்படம்... தேசிய திரைப்பட விழாவில் 6 விருதுகளை குவித்த ஆர்.ஆர்.ஆர்
69வது தேசிய திரைப்பட விழாவில் ஆறு தேசிய விருதுகளை தட்டித்தூக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்
2021ம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட தேசிய விருது இன்று மாலை அறிவிக்கப்பட்டது. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்த படங்களை கொண்டு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்பட இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர் சிறந்த பாடகர், பாடகி, நடனம், சவுண்ட் எஃபெக்ட் என பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி 2022ம் ஆண்டு மார்ச் மாதம் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர். படம் ஆறு தேசிய விருதுகளை வாரி குவித்துள்ளது.
- சிறந்த பின்னணி இசைக்காக ஆர்.ஆர்.ஆர். படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணிக்கு விருது அறிவிப்பு
- சிறந்த நடன அமைப்புக்காக ஆர்.ஆர்.ஆர். படத்தின் நடன பயிற்சியாளர் பிரேன் ராஜ்ஷிதிற்கு விருது அறிவிப்பு
- சிறந்த சண்டை பயிற்சிக்காக ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சாலமனிற்கு விருது அறிப்பு
- சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்காக ஆர்.ஆர்.ஆ. படத்தின் ஸ்ரீனிவாஸ் மோகனிற்கு விருது அறிவிப்பு
- சிறந்த ஆண் பாடகருக்காக ஆர்.ஆர்.ஆர். படத்தின் தெலுங்கு பாடல்( கொமுரன் பீமுடோ) பாடலை பாடியுள்ள கால பைரவாவிற்கு விருது அறிவிப்பு
- சிறந்த பொழுதுபோக்கு படத்திற்காக ஆர்.ஆர். ஆர். படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு
தொடர்ந்து ராஜமவுளி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர். படம் 6 தேசிய விருதுகளை குவித்துள்ளதால் படக்குழுவினரும், விருது பெற்றுள்ள பிரபலங்கள் மகிழ்ச்சியுள்ளனர். ரசிகர்களும் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் இரண்டு இரண்டு ஆஸ்கர் விருதுகளை ஆர்.ஆர்.ஆர். படம் பெற்றிருந்தது. படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடலுக்கும், சிறந்த ஒரினல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணிக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது ஆறு தேசிய விருதையும் ஆர்.ஆர்.ஆர். படம் வாங்கி குவித்துள்ளது.
ராஜமவுளி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த ஆர்.ஆர்.ஆர். படம் கடந்த ஆண்டு ரிலீசானது. சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாகக் கொண்டு ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் பெரிய அளவில் ஹிட் அடித்து பாக்ஸ் ஆபிசில் ரூ.1,300 கோடி வசூலை குவித்திருந்தது.
மேலும் படிக்க: National Film Awards 2023 LIVE : 69வது தேசிய விருதுகள்... சிறந்த நடிகர் யார்? சிறந்த திரைப்படம் என்ன? மொத்த லிஸ்ட்டும் இங்கே...!