Naane Varuven: ‘நானே வருவேன்’ படத்திற்கு 4 மணி காட்சி ஏன் இல்லை? - கலைப்புலி தாணு பேட்டி!
Naane Varuven Early Morning Show: 'நானே வருவேன்' படத்திற்கு காலை 4 மணி காட்சி கொடுக்கப்படாதது ஏன் என கலைப்புலி தாணு பேசியிருக்கிறார்.
'நானே வருவேன்' படத்திற்கு காலை 4 மணி காட்சி கொடுக்கப்படாதது ஏன் என கலைப்புலி தாணு பேசியிருக்கிறார்.
'நானே வருவேன்' படத்திற்கு காலை 4 மணி காட்சி கொடுக்கப்படாதது குறித்து அவர் பேசும் போது, “ என்னுடைய அசுரன் படமாக இருக்கட்டும், இல்லை கர்ணன் படமாக இருக்கட்டும் இரண்டையுமே நான் காலை 8 மணி காட்சிக்குத்தான் திரையிட்டேன்.
காரணம் அந்த காட்சியில்தான், உலகம் முழுக்க அனைவராலும் படம் பார்க்க முடியும். 4 மணிக்கு காட்சி கொடுத்தால் பல ஊர்களில் அது இடம் பெற வாய்ப்பு இருக்காது. சில தியேட்டர்களில்தான் அது திரையிடப்படும். இன்னொரு காரணம் இன்றைய இளைஞர்கள் அந்த காலை காட்சிக்கு அடித்து பிடித்து ஓடி வருகிறார்கள். அது தேவையில்லை என்று நினைக்கிறேன்.” என்று பேசியிருக்கிறார்.
நன்றி: behindwoods
கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
View this post on Instagram
பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கும் இந்தப்படம் வருகிற 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே போல செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நானே வருவேன்’.
View this post on Instagram
இந்தப்படம் வருகிற செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் இந்தப்படம் பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிராக வெளியிடப்படுவதாக சொல்லப்பட்ட நிலையில் அதற்கு கலைப்புலி தாணு விளக்கமும் அளித்துள்ளார்.
அவர் அளித்த விளக்கம்:
இது குறித்து பேசியிருக்கும் அவர், “பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிராக ‘நானே வருவேன்’ படம் வெளியிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதில் அவர்களுக்கும் சரி, எங்களுக்கும் சரி எந்த வித கருத்துவேறுபாடு இல்லை.
உதாரணத்துக்கு ஜூன் மாதம் 25 ஆம் தேதி நானும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சிஇஓ தமிழ்குமரனும் பேசும் போது, இரண்டு பேரும் ஒரே மாதத்தில்தான் வருகிறோம் என்றேன். உடனே அவர் ஏன் என்று கேட்டார்? .. அதற்கு பதிலளித்த நான் ‘அசுரன்’ படத்தை பண்டிகையின் போதுதான் வெளியிட்டேன். அதே போல இதிலும் அந்த 9 நாட்களை நான் விடமாட்டேன் என்று சொன்னேன்.
இங்கு பண்டிகையின் போது நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அந்த சமயத்தில் 4 படங்கள் வந்தால் கூட தாங்கும். இந்த போட்டியில் ஏன் இன்னும் கூட 2 படங்கள் எதிர்பார்க்கலாம். இந்த 9 நாள் விடுமுறை நாட்கள் அப்படியானதுதான். இத மிஸ் பண்ணவே கூடாது. இன்னொன்று நான் அவர்கள் வெளியிடும் அதே தேதியில் வெளியிடவில்லை. ஒரு நாள் முன்னதாகத்தான் வருகிறேன். இதிலிருந்து நான் அவர்களுடன் போட்டி போட வில்லை என்பது தெரிகிறது.” என்று பேசியிருக்கிறார்.