மேலும் அறிய

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் அருளுடன் இசைஞானி இளையராஜா மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து புத்தாண்டை கொண்டாடினார்கள்.

தமிழகத்தில் ஜனவரி ஒன்றாம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் இந்து கோயில்களில் நள்ளிரவு இரவு 12 மணிக்கு நடை திறந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதில்லை. ஆகம விதிப்படி நள்ளிரவில் கோயில்களை திறந்து வழிபட அனுமதி இல்லை.  மார்கழி மாதத்தில் கோயில்கள் அதிகாலை 3:30 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆங்கில புத்தாண்டன்று திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த சில நாட்களாக ஐயப்ப பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் பக்தர்களின் வருகையால் அண்ணாமலையார் கோயிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

 


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

மேலும் தற்போது  ஆங்கில புத்தாண்டு என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை  அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் ஆங்கில புத்தாண்டு நாள் என்பதால் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர். வெளி மாநில பக்தர்கள், ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் அதிகாலையில் இருந்தே பணியை கூட  பொருட்படுத்தாமல் கோயிலுக்கு வந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் திருவண்ணாமலையில் பௌர்ணமி நாட்கள் மட்டுமின்றி தற்போது அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.  ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோயிலில் திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

 

அதனைத்தொடர்ந்து ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இசைஞானி இளையராஜா காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, அப்படியே அங்கு இருந்து நேரடியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வந்து இளையராஜா சாமி தரிசனம் செய்தனர். அவருக்கு கோயிலின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் அருள்மிகு அண்ணாமலையார் பக்தர்கள், விழாவினர் மற்றும் அப்பர் உழவாரப்பணி சிவனடியார்கள் திருக்கூட்டமும் இனைந்து 27ம் ஆண்டு மார்கழி மாத லட்டு உபய விழாவினை இறைவன் அருள்மிகு அண்ணாமலையார் தரிசனம் செய்து வரும் பக்தர்களுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டு வழங்கினார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
எதிர்பாராத விபத்து - கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழப்பு
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
Breaking News LIVE: ஜவ்வாது மலைத்தொடரில் கனமழை - வேலூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம்
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB Vs CSK: இவங்களையா பென்ச்ல உட்கார வச்சோம்! சென்னையிடம் அசத்திய அந்த 3 வீரர்கள்! அட்ராசிட்டி செய்யும் ஆர்சிபி!
RCB vs CSK:
"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால்..." வெற்றிக்கு பின் திக் திக் நிமிடங்களை பகிர்ந்த ஆர்சிபி கேப்டன் ஃபாஃப்!
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Rain Alert: ரெட் அலெர்ட் - இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? சென்னை நிலவரம்..
Karunas:
Karunas: "பணம் வைத்திருப்பவர்கள் எல்லாரும் நல்லவர்கள் கிடையாது" - நடிகர் கருணாஸ் ஆக்ரோஷம்!
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
SRH Vs PBKS, IPL 2024: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை குறிவைக்கும் ஐதராபாத்..! பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை
K Rajan: “சினிமாவில் அட்ஜஸ்மெண்ட் நடக்குது” - சுசித்ரா குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கே.ராஜன்!
K Rajan: “சினிமாவில் அட்ஜஸ்மெண்ட் நடக்குது” - சுசித்ரா குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கே.ராஜன்!
Embed widget