இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமணம்.. நேரில் சென்று வாழ்த்து விஜய் சேதுபதி, பா.ரஞ்சித்..
பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக ஜஸ்டின் பிரபாகரன், ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து குறுகிய காலத்துக்குள் கவனம் ஈர்த்தார்.
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களுள் ஒருவரான ஜஸ்டின் பிரபாகரன், கரோலின் சூசன்னா என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்துக்கு தமிழ் சினிமா பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக ஜஸ்டின் பிரபாகரன், ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், தர்மபிரபு, நாடோடிகள் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து குறுகிய காலத்துக்குள் கவனம் ஈர்த்தார்.
தொடர்ந்து டியர் காம்ரேட், ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்ட நிலையில், தமிழ் பாடல்களும் முன்னதாக நல்ல வரவேற்பைப் பெற்றன.
View this post on Instagram
இந்நிலையில், தமிழ், தெலுங்கு மொழிகளில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக வலம் வரும் ஜஸ்டின் பிரபாகரனுக்கு கரோலின் சூசன்னா என்பவருடன் இன்று மதுரையில் திருமணம் நடைபெற்றது.
கிறிஸ்தவ முறைப்படி மதுரையின் பிரபல சர்ச்சில் நடைபெற்ற இவரது திருமணத்தில் சொந்தங்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
தொடர்ந்து மதுரை எல்லீஸ் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரிசப்ஷனில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஷாந்தனு பாக்யராஜ், கலையரசன், காளி வெங்கட், பால சரவணன், ஆதித்யா, கதிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
மேலும், இயக்குனர்கள் பா.ரஞ்சித், விக்ரம் சுகுமாரன், நாகராஜ், மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன், அதியன் ஆதிரை, ப்ராங்கிளின் ஜேக்கப், ஷான், பரத் கம்மா, விவேக் சோனி, தயாரிப்பாளர் S.R.பிரபு,
பின்னணி பாடகர்கள் கிருஷ், அந்தோணிதாசன் பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஜஸ்டின் பிரபாகாரன் இசையமைப்பாளராக வலம் வருவதோடு மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக தமிழ் சினிமாவில் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.