மேலும் அறிய

அவரோட இசைக்கு பெரிய பவர் இருக்கு...டி.ஆர் பற்றி ஏ.ஆர் ரஹ்மான்

டி. ராஜேந்தர் இசை கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவரது இசைக்கும் பெரிய பவர் இருப்பதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்

ஒவ்வொரு காலத்திலும் ஒரு டிரெண்ட் செட்டர் இயக்குநர்கள் சினிமாவில் வந்து போகிறார்கள். இன்றைய 2 கே கிட்ஸ் மத்தியில் பிரதீப் ரங்கநாதன் ட்ரெண்ட் செட்டராக இருப்பது போல் 80 களில் இளம் தலைமுறை மத்தியில் டிரெண்ட் செட்டராக இருந்தவர் டி.ராஜேந்தர்.

ஒரு தலை ராகம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான டி.ஆர் அடுத்த பத்து ஆண்டுகளில் அதிகம் கொண்டாடப்பட்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தார். என் தங்கை கல்யாணி , மைதிலி என்னை காதலி , ஒரு வசந்த கீதம் என ஹிட் படங்களை இயக்கியது மட்டுமில்லாமல் இசையமைப்பாளர், பாடகர் , பாடலாசிரியர் ஒளிப்பதிவாளர் என டி.ஆர் தொட்டதெல்லாம் தங்கமானது. டி.ஆர் பாடிய பாடல்கள் வைப் மெட்டீரியலாக மாறின. 

டி.ஆர் பற்றி ஏ ஆர் ரஹ்மான்

இன்று டி.ஆர் இணையத்தில் பெரும்பாலும் ட்ரோல் செய்யப்படுகிறார் என்றாலும் பல துறைகளை திறமையாக கையாண்ட அவரது திறமையை பலர் தொடர்ந்து வியந்து பேசி வருகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் டி.ஆரின் இசையை பாராட்டி பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நீயா நானா கோபிநாத் உடனான நேர்காணலில் சமீபத்தில் ரஹ்மான் கலந்துகொண்டார். இந்த தன்னுடைய சீனியர்களிடம் தான் கற்றுக்கொண்டது பற்றி ரஹ்மான் பேசினார். " எம்.எஸ்.வியிடம் நான் பணியாற்றியிருக்கிறேன். தமிழ் மொழியை குழைத்து அதை அவரது இசையில் கொண்டு வருவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதேபோல் டி.ஆரின் இசை நேராக இதயத்தில் இருந்து வருவது . அவர் இசை கற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவரது இசைக்கு பெரிய பவர் இருக்கு. இளையராஜாவின் இசைப் பற்றி எல்லாருக்கும் தெரியும் ஆனால் இளையராஜாவிடம் நான் கற்றுக் கொண்ட முக்கியமான இன்னொன்று இருக்கு. அப்போது எல்லாம் கம்போசிங் முடிந்ததும் எல்லாரும் குடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். கட்டியிருக்கும் வேட்டி அவிழ்ந்து வீட்டிற்கு போய் மனைவியிடம் கலவரம் செய்யும் அளவிற்கு குடித்திருப்பார்கள். ஆந்த சூழலை மாற்றி அனைவருக்கும் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர் இளையராஜாதான். இளையராஜாவின் குழுவில் வாசிக்கிறோம் என்றால் மற்றவர்கள் மரியாதையாக நம்மை மரியாதையாக நடத்துவார்கள். அந்த மரியாதையை உருவாக்கியவர் அவர்தான். இந்த கலைக்கு அவர் மதிப்பு கொடுத்ததை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்." 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget