Adipurush Twitter Review: ’என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?..’ ஆதிபுருஷ் பார்க்க போய் நொந்து போன ரசிகர்கள் - ட்விட்டர் விமர்சனம் இதோ..!
Adipurush Twitter Review: நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் (Adipurush) படமானது இன்று வெளியாகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Adipurush Twitter Review: நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் (Adipurush) படமானது இன்று வெளியாகியுள்ள நிலையில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஓம் ராவத் இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாகும் படம் ‘ஆதிபுருஷ்’. இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனான சன்னி சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா இருவரும் இசையமைத்துள்ளனர்.
#Adipurush🔥🔥
— Srk Fans Trends (@SrkFansTrends_) June 16, 2023
The drama part is next level and followed by excellent music.
VFX is good but is poor particularly in some action scenes but overall feel good
Best wishes to our darlings on the behalf of @iamsrk Sir
BoxOffice rampage by darling
Haters better go underground🔥 pic.twitter.com/nOufuAAv02
கடந்தாண்டு வெளியான ஆதிபுருஷ் படத்தின் டீசரும், கடந்த வாரம் வெளியான ட்ரெய்லரும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. ஆனாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
ஆதிபுருஷ் படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த ஜூன் 11 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தமிழ் தவிர்த்து பிற மொழிகளில் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பல பிரபலங்கள் ஆதிபுருஷ் படத்தை அனைவரும் காண வேண்டும் என்ற நோக்கத்தில் இலவச டிக்கெட்டுகளையும் விநியோகித்து வருகின்றனர்.
#Adipurush #Adhipurush
— Pravi (@Pravi24487544) June 16, 2023
first Half 💥🔥
Prabhas Introoo 💥🔥
Hanuman 💥🔥
Janiki Kidnapp Scene 💥🔥
First Half 4⭐/5 🔥
Visuals 4⭐/5💥
VFX 3⭐/5💥#Prabhas pic.twitter.com/WwiBn6F0Dh
முன்னதாக திருப்பதியில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஓம் ராவத், ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டரில் ஒரு சீட்டை ஹனுமனுக்காக காலியாக வைக்க வேண்டும் என தயாரிப்பாளரிடமும், விநியோகதஸ்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
#Adipurush
— Adrenaline 🦾 (@ankitsingh7272) June 15, 2023
What a movie a emotion for Hindus. What a VFX 🔥🔥#AdipurushOnJune16#AdipurushBookings #Prabhas𓃵 pic.twitter.com/T0wP25CreC
இது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் ஆதிபுருஷ் படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது.
Title Card ❤️🔥#Adipurush #Adipursh #Prabhas #Prabhas𓃵 #Sudarshan35MM pic.twitter.com/gH5u9zKMM1
— Nikhil Ngk (@BrokenSoul59) June 15, 2023
தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு முதல் காட்சி 8 மணிக்கு தொடங்கும் நிலையில், பிறமாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட்டது. நள்ளிரவு முதலே ரசிகர்களுக்கு தியேட்டர்களுக்கு படையெடுத்து வந்தனர். இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை நாம் இங்கு இணைத்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
VFX on par with Hollywood movies top notch work & goosebump scene 🥵🔥 #Adipurush #Prabhas #AdipurushReview
— Tharun🦁 (@officialtharun_) June 15, 2023
pic.twitter.com/d4TypJXuVG