Movie Releases Today: களைகட்ட தொடங்கிய தீபாவளி.. இன்று மட்டும் 4 படங்கள் ரிலீஸ்.. என்னென்ன தெரியுமா?
Movie Release Today Tamil, Nov 10: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று 4 படங்கள் வெளியாகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.
Movie Release Today: நாளை மறுநாள் (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இன்று 4 படங்கள் வெளியாகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.
தீபாவளி என்றாலே என்ன புத்தாடைகள், பட்டாசுகள் வாங்கலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு ஒருபுறம் இருக்க, இவர்களில் சினிமா ரசிகர்களுக்கு என்ன படம் ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முன்னெல்லாம் தீபாவளி பண்டிகை தினத்தன்று தான் புதுப்படங்கள் ரிலீசாகும். ஆனால் இப்போதோ, வியாபாரம் மற்றும் வசூலை கருத்தில் கொண்டு வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை படங்கள் வெளியாகி விடுகிறது. அதன்படி தீபாவளி படங்கள் இன்று ரிலீசாகிறது.
ஜப்பான்
நடிகர் கார்த்தியின் 25வது படம் என்ற பெருமையோடு வெளியாகியுள்ளது ‘ஜப்பான் (Japan)’ படம். ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் அனு இம்மானுவேல், சுனில் வர்மா, வாகை சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார், ஜித்தன் ரமேஷ், பவா செல்லதுரை, விஜய் மில்டன் என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள ஜப்பான் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் திருடனாக கார்த்தி நடித்துள்ளார். ஏற்கனவே ட்ரெய்லர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
கார்த்திக் சுப்பராஜின் 2வது படமாக 2014 ஆம் ஆண்டு வெளியானது ஜிகர்தண்டா. இந்த படத்தின் 2 ஆம் பாகம் 9 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ளது. “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், சத்யன், ஷைன் டைம் சாக்கோ, இளவரசு என பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கேங்க்ஸ்டராகவும், எஸ்.ஜே.சூர்யா இயக்குநராகவும் வருகிறார்கள்.
ரெய்டு
கார்த்தி என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள “ரெய்டு” படமும் தீபாவளி ரேஸில் களம் கண்டுள்ளது. இயக்குநர் முத்தையா இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ள நிலையில் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா, அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா என பலரும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இப்படம் கன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்த தகரு படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. இறுகப்பற்று படம் விக்ரம் பிரபுவுக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்த நிலையில் ரெய்டு படம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு அவரை அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளக்காரத்துரை படத்துக்குப் பின் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா இருவரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
The Marvels
The Marvels என்ற ஹாலிவுட் படமும் தீபாவளிக்கு ரிலீசாகியுள்ளது. மார்வெல் காமிக்ஸை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ப்ரி லார்சன், டெயோனா பாரிஸ், இமான் வெல்லானி , ஜாவே ஆஷ்டன் உள்ளிட்டோர் மிக முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இது 2019 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் மார்வெல் படத்தின் தொடர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.