மேலும் அறிய

மன்னிப்பு கேட்டது ஏன்? யார் கொடுத்த அழுத்தம்...சின்மயிக்கு மோகன் ஜி சரமாரி கேள்விகள்

திரெளபதி 2 படத்தின் எம்கோனே பாடலை பாடியதற்கு சின்மயி மன்னிப்பு கேட்ட நிலையில் இதுகுறித்து மோகன் ஜி தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரெளபதி 2 படத்தின் பாடலை பாடியதற்கு பின்னணி பாடகி சின்மயி மன்னிக்கு கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை குறித்து தற்போது மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் 

திரெளபதி 2 பாடலால் சர்ச்சை

மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர் ரிஷி நடிப்பில் உருவாகி வரும் திரௌபதி 2 படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் எம்கோனேநேற்று வெளியிடப்பட்டது. இந்த பாடலை சின்மயி பாடியதை ரசிகர்கள் பலர் விமர்சித்து இருந்தனர். சாதிய பெருமிதம் பேசும் மோகன் ஜி படங்களின் கருத்தியலை சின்மயி ஆதரிக்கிறாரா என பலர் கேள்வி எழுப்பினர்.  இதனைத் தொடர்ந்து திரெளபதி 2 பாடலை பாடியதற்காக சின்மயி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார். 

“விளம்பர ஜிங்கிள்கள் பாடிய நாட்களிலிருந்து கடந்த 18 ஆண்டுகளாக எனக்குத் தெரிந்த இசையமைப்பாளர் ஜிப்ரான். அவரின் அலுவலகத்திலிருந்து இந்தப் பாடலுக்கு அழைப்பு வந்ததால், வழக்கம்போல் சென்று பதிவு செய்தேன். அப்போது ஜிப்ரான் அங்கே இல்லை என நினைக்கிறேன் — பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து யாரோ ஒருவர் ஒரு கருத்து மட்டும் தெரிவித்தார். நான் பதிவு செய்து வெளியேறினேன். படத்தின் உள்ளடக்கம் குறித்து எனக்கு முன்பே தெரிந்திருந்தால், எனது கொள்கைக்கு முழுமையாக முரண்படுவதால் நான் இதை ஒருபோதும் பாட முடியாது. இதுவே உண்மை,” என்று தனது எக்ஸ் பதிவில் சின்மயி தெரிவித்திருந்தார். 

சின்மயி மீது விமர்சனம்

சின்மயி மன்னிப்பு கேட்டிருந்தாலும் இந்த சர்ச்சை குறித்து பல்வேறு விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்து வருகிறார்கள். ஒரு பாடலை பாடும் போது படத்தின் இயக்குநர் என்று தெரியாமலா பாடுவீர்கள் என சிலர் கேள்வி எழுப்பினர். இன்னொரு பக்கம் சின்மயி ஒரு பாடகர். அவர் ஒரு படத்திற்காக பாடுவது என்பது அந்த படத்தின் இயக்குநரின் அரசியல் கருத்தியலை ஆதரிப்பதாக ஆகாது என்றும் சிலர் ஆதரவு கருத்து தெரிவித்துள்ளார்கள். 

மோகன் ஜி பதில் 

சின்மயி மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை குறித்து மோகன் ஜி தற்போது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். " எல்லாருக்கும் வணக்கம். திரெளபதி 2 படத்தின் பாடலை ஜிப்ரான் இசையில் வெளியிட்டிருந்தோம். இந்த பாடலை சின்மயி குரலில் பாட வேண்டும் என்று நான் தான் கேட்டுக்கொண்டேன். ரொம்ப நாட்களாக நான் சின்மயி ரசிகன். நேற்று பாடல் வெளியானபோது அதில் சின்மயி மேடமின் வீடியோ இருந்தது. இதனைப் பார்த்ததும் ஒரு சிலர் சின்மயி மேடமை விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். நான் நினைத்தது போல சின்மயி இந்த பாடலை பாடியதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டார். அவர் எங்களிடம் எந்த விளக்கமும் கேட்காமல் அப்படி சொன்னது எங்களுக்கு அதிர்ச்சி அளித்தது. நான் எப்போதும் கடவுள் இருக்கு என்று சொல்கிறவன். எனக்கு தெரிந்தும் சின்மயி மேடமும் கடவுள் மறுப்பாளர் கிடையாது. அவரது பெயரிலேயே ஶ்ரீபாதா என்கிற வார்த்தை இருக்கிறது. கொள்கை ரீதியாக அவரும் நானும் எந்த விதத்தில் வேறுபடுகிறோம் என்கிற எனக்கு தெரியவில்லை. நான் கேட்க விரும்புவது ஒன்றுதான். யார் கொடுத்த அழுத்தத்தால் நீங்கள்  இந்த மன்னிப்பு கேட்டீர்கள். நான் ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டதைப் போல் நீங்கள் என்னை ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். உங்களது பதிவு இந்த படத்தை வியாபார ரீதியாக பாதிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அதனால் நீங்கள் விளக்கம் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் பதிவை நீங்கள் நீக்கவேண்டும்" என மோகன் ஜி வீடியோ வெளியிட்டுள்ளார்

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget