![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Miss Universe Harnaaz Sandhu: 'குண்டாகிட்டேன்னு' சொன்னபோது உடைஞ்சுட்டேன்.. மீண்டு வந்த கதையை ஊக்கமாய் சொன்ன அழகி!
Miss Universe Harnaaz Sandhu: ஹார்னாஸ் சாந்து, உடல் எடை அதிகரித்ததால் தான் கேலிக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து வேதனையுடன் மனம் திறந்துள்ளார்.
![Miss Universe Harnaaz Sandhu: 'குண்டாகிட்டேன்னு' சொன்னபோது உடைஞ்சுட்டேன்.. மீண்டு வந்த கதையை ஊக்கமாய் சொன்ன அழகி! Miss Universe Harnaaz Sandhu says she was bullied online after gaining weight Miss Universe Harnaaz Sandhu: 'குண்டாகிட்டேன்னு' சொன்னபோது உடைஞ்சுட்டேன்.. மீண்டு வந்த கதையை ஊக்கமாய் சொன்ன அழகி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/05/9c9c296aabfc6d024201f0a3269623581659685087_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இஸ்ரேலில் உள்ள ரிசார்ட் நகரம் என்று அழைக்கப்படும் ஈலாட்டில், கடந்த ஆண்டு நடந்த 70-வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் இந்தியாவின் மாடல் அழகி ஹர்னாஸ் சாந்து (Harnaaz Sandhu) 70-வது பிரபஞ்ச அழகி பட்டம் வென்றவர். உடல் எடை அதிகரித்ததால் தான் கேலிக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து வேதனையுடன் மனம் திறந்துள்ளார்.
”இப்போது கொஞ்சம் உடன் எடை கூடிவிட்டது. இதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. என் உடல் எடை சற்று அதிகரித்திருப்பதை நான் பிரச்சினையாக கருதவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் என்னுடைய ரீசண்ட் ஃபோட்டோக்களைப் பார்த்துவிட்டு “ என்ன குண்டாகிட்டீங்கன்னு” பலர் கிண்டல் செய்திருக்கிறார்கள்.” என்று கூறியிள்ளவர், என்னைப் பற்றி இவ்வாறு கமெண்டகள் வருவது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒருவருடைய உடல் தோற்றம் குறித்து கருத்துச் சொல்வது, கேள்வி எழுப்பது சரியானதில்லை என்று பலரும் ஹர்னாஸ் சாந்துவிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தங்களுக்கு தேவையில்லாத விஷயங்களில், என் உடல் தோற்றத்தில் மக்கள் தங்களது கருத்துக்களைச் சொல்கிறேன் என்பதை எனக்கு அச்சுறுத்தும் விதமாக இருப்பதாக ஹர்னாஸ் சாந்து தெரிவித்துள்ளார்.
எல்லாம் அழகே!
ஒருவரின் உடல் தோற்றத்தில் ஏதும் இல்லை; அவரின் உள்ளம், சிந்தனை எப்படி இருக்கிறது என்பதே முக்கியம்; ஒருவர் மற்றவரை எப்படி நடத்துகிறார்; அவருடைய நம்பிக்கைகள் என்னவாக இருக்கிறது- இவையே முக்கியமானவை. உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது அர்த்தமற்றது என்பதை தெளிவாக கூறியுள்ளார் ஹர்னாஸ் சாந்து.
நெகடிவ் கமெண்ட்கள்- மன உளைச்சல்:
தன் உடல் தோற்றம் குறித்து வரும் எதிர்மறையான கருத்துகள் குறித்து ஹர்னாஸ் சாந்து கூறுகையில், “ என் உடல் எடை அதிகரித்திருப்பது குறித்து பலரும் கேலி செய்தபோது, உண்மையாகவே நான் மனம் உடைந்து போனேன். சில சமயங்களில், நான் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, பலரும் என் உடல் தோற்றத்தை வைத்து கேலி செய்தது நினைவுக்கு வந்துவிடும். அது என்னை மேலும் சோகத்தில் ஆழ்த்திவிடும். அதிலிருந்து மீண்டு வர காலமெடுத்ததாகவும் ஹர்னாஸ் சாந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
குளூட்டன் (gluten) ஒவ்வாமை:
எனக்கு குளூட்டன் உணவுகள் சாப்பிடுவதில் ஒவ்வாமை இருக்கிறது. குளூட்டண் புரோட்டீன் உள்ள உணவுகளை என்னால் சாப்பிட முடியாது. முட்டை, கோதுமை, தேங்காய், சோயா உள்ளிட்டவைகள் எனக்கு அல்ர்ஜி. என் உடலுக்கு எந்தந்த உணவுகள் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளும் என்று மெல்ல மெல்ல அறிந்துகொண்டேன். இப்போதுதான் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற தொடங்கியிருக்கிறேன்.
எண்ணம் போல் வாழ்க்கை:
வாழ்வின் கடின காலங்களை போராடி கடந்து வந்தேன். எதேல்லாம் மோசமானது என நான் நினைத்திருந்தேனே, அந்த எண்ணங்களில் அனைத்திலும் இருந்து வெளிவந்தேன். அது அவ்வளவு சுலபமில்லை. எல்லாவற்றையும் மோசம் என்றும், என்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையையும் தூக்கி எறிந்துவிட்டேன். இப்போது எல்லாவற்றையும் நான் நேசிக்க தொடங்கிவிட்டேன். வாழ்வில் இன்னல்கள் இருக்கத்தான் செய்யும். துன்பங்கள் வரும்போது அழுவதில் தவறில்லை. சோகமாக உணர்ந்தால் அதை உணருங்கள். உங்கள் மனம் என்ன சொல்கிறதென்று செவிமடுத்துக் கேட்க தொடங்குங்கள். அழ வேண்டுமா? அழுதே தீர்த்துவிடுங்கள்; அதில் எந்த தவறும் இல்லை. உங்களை முழு மனதோடு நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். இங்கு யாரும் குறைகள் இல்லாதவர்கள் இல்லை. குறைகள் என்ற ஒன்றே இல்லை. நம் இயல்பை ஏற்றுக்கொண்டாலே மகிழ்ச்சியாக வாழலாம் என்று தன் மனதில் இருந்தவற்றை தெளிவாக அழகாக பதிவு செய்துள்ளார்.
ஹர்னாஸ் சாந்து, தன் கதையை பகிர்ந்து கொள்வதன் மூலம் பலருக்கும் ஊக்கமளிப்பதாய் இருக்கும் என்றும் எப்போதும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று கூறியுள்ளார்.
லாரா தத்தாவிற்கு ( Lara Dutta ) பிறகு, 21 ஆண்டுகளுக்கு பிறகு பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஹர்னாஸ் சாந்து.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)