மேலும் அறிய

கேப்டன் தம்பிங்க நாங்க இருக்கோம்...பாவா லட்சுமணனுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்த அமைச்சர் ராஜ்மோகன்

நடிகர் பாவா லட்சுமணனை நேரில் சென்று சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி தங்க வீடு ஏற்பாடும் செய்துகொடுத்துள்ளார்.

உடல்நலக் குறைவு மற்றும் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த நடிகர் பாவா லட்சுமணனுக்கு தமிழக அரசின் சார்பில் மனிதநேய உதவி கிடைத்துள்ளது. அமைச்சர் ராஜ்மோகன் தலையீட்டின் மூலம் சென்னை எம்.எல்.ஏ. விடுதியில் தங்குவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால், தற்போது அவர் அங்கு குடியேறியுள்ளார். இந்த சம்பவம் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் பாவா லட்சுமணன், ஏராளமான படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். சமீப காலமாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக திரைப்பட வாய்ப்புகளும் குறைந்ததால் பொருளாதார சிக்கலையும் அவர் எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. குடும்பத்துடன் வசிப்பதற்கே சிரமமான சூழல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

திரையுலகைச் சேர்ந்த ஒரு சிலர் பாவா லட்சுமணனின் நிலை அறிந்து அவருக்கு நிதியளித்து உதவினர். அந்த வகையில் நடிகர் லெஜண்ட் சரவணன் பாவா லட்சுமணனின் மருத்துவ செலவிற்காக 2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

வீடு ஏற்பாடு செய்த அமைச்சர் ராஜ்மோகன்

இந்த நிலைமை குறித்து தகவல் அறிந்த அமைச்சர் ராஜ்மோகன், நடிகருக்கு உடனடி உதவி வழங்க நடவடிக்கை எடுத்தார். அதன் ஒரு பகுதியாக, சென்னை எம்.எல்.ஏ. விடுதியில் அரசின் சார்பில் தங்குவதற்கான வசதி ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாவா லட்சுமணன் அங்கு குடியேறியுள்ளார். அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திரையுலகில் பல ஆண்டுகள் பணியாற்றிய கலைஞர்கள் வயது முதிர்வு அல்லது உடல்நலக் குறைவு காரணமாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வருகின்றன. அத்தகைய சூழலில் பாவா லட்சுமணனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உதவி, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் அமைச்சர் ராஜ்மோகனின் நடவடிக்கையை வரவேற்று கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், பாவா லட்சுமணனின் உடல்நலம் விரைவில் குணமடைந்து அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். அவருக்கு மேலும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும், அரசும் திரையுலகினரும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது அவருக்கு பாதுகாப்பான தங்குமிடம் கிடைத்திருப்பது அவரது சிகிச்சை மற்றும் உடல்நல மீட்சிக்கு முக்கியமான ஆதரவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று நடிகர் பாவா லட்சுமணனை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விரிவாக விசாரித்தார். "உங்களுக்கு இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். உங்களுடைய சகோதரன் நான். உங்க நேர்காணலைப் பார்த்தேன். அதில் கேப்டன் இருக்கும்போது உங்க நிலைமை நன்றாக இருந்ததாக சொன்னீர்கள். கேப்டனின் தம்பிகளாக தான் நாங்கள் இருக்கோம். மான்புமிகு முதல்வர் விஜய் ஆட்சியில்  நலிந்த கலைஞர்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம். நீங்கள் கவலையே படாதீர்கள். உங்களுக்காக ஒரு முழு ஏற்பாடு செய்வது வரை நீங்கள் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருங்கள். என்னால் முடிந்த எல்லாமே நாங்கள் உங்களுக்கு செய்கிறேன் கூடிய விரைவில் உங்களை திரையில் பார்க்க விரும்புகிறேன். " என அமைச்சர் ராஜ்மோகன் பாவா லட்சுமணனிடம்  தெரிவித்தார்

Advertisement

தலைப்பு செய்திகள்

கேப்டன் தம்பிங்க நாங்க இருக்கோம்...பாவா லட்சுமணனுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்த அமைச்சர் ராஜ்மோகன்
கேப்டன் தம்பிங்க நாங்க இருக்கோம்...பாவா லட்சுமணனுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்த அமைச்சர் ராஜ்மோகன்
தனுஷின் ஓம் படத்துடன் வெளியாகும் ஜெயிலர் 2...ஒதுங்கிப்போவாரா எக்ஸ் மாப்பிள்ளை?
தனுஷின் ஓம் படத்துடன் வெளியாகும் ஜெயிலர் 2...ஒதுங்கிப்போவாரா எக்ஸ் மாப்பிள்ளை?
“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !
“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !
விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் ஜெயிலர் 2...மாஸான ப்ரோமோவோடு ரிலீஸ் தேதி அறிவிப்பு
விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் ஜெயிலர் 2...மாஸான ப்ரோமோவோடு ரிலீஸ் தேதி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
Skoda Kodiaq RS Sold Out: தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
Embed widget