Sivakarthikeyan: "மறக்கவே மாட்டேன்.. திருச்சிக்கு அவர்தான்” சிவகார்த்திகேயன் பத்தி சீக்ரெட் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்
யூடியூப் சேனலின் விருது வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், சிவகார்த்திகேயன் குறித்து புகழ்ந்து பேசினார்.
திறமை என்ற ஒன்று இருந்தால் முன்னேறிவிடலாம் என்பதற்கு உதாரணமாக வாழ்பவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். திருச்சியில் பிறந்த சிவகார்த்திகேயன் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே பல குரல் கலையில் குறிப்பிடத்தக்கவராக இருந்தார். அப்போதே பல பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.
இதனையடுத்து விஜய் டிவியில் நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை எண்ட்ரி ஆன சிவா, அதன் பின் அந்த சேனலின் செல்ல பிள்ளையானார்.சிவகார்த்திகேயனின் திறமையை பார்த்த சேனல் நிகழ்ச்சிகளை இயக்கும் இயக்குநர் சிவாவுக்கு தொகுப்பாளர் ரோலை கொடுத்தார். அதிலும் அவர் தனது தனி முத்திரையை பதித்தார். ஹ்யூமருடனும், டைமிங்குடன் அவர் நிகழ்ச்சியை நடத்திசென்ற விதமும் பார்வையாளர்களையும் கவர்ந்தது.
இதனையடுத்து இயக்குநர் பாண்டிராஜ் மெரினா படம் மூலம் 2012ஆம் ஆண்டு ஹீரோ வாய்ப்பை கொடுத்தார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் குழந்தைகளை கவர்ந்தது. இதனால் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோவானார் சிவா.
View this post on Instagram
இந்நிலையில், Black Sheep Tamil யூடியூப் சேனலின் விருது வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், சிவகார்த்திகேயன் குறித்து புகழ்ந்து பேசினார். சிவகார்த்திகேயன் எங்க ஊரு பெருமை என்று அவர் குறிப்பிட்டார். மேடையில் பேசிய அவர், ''ஹைதராபாத்துக்கு 3, 4 வருஷத்துக்கு முன்னாடி அவார்ட் பங்ஷனுக்கு நானும் உதயும் போய் இருந்தோம். அங்கு சிவகார்த்திகேயன், தனுஷ் எல்லாருமே வந்திருந்தாங்க. நிகழ்ச்சி முடிந்ததும் டான்ஸ் பார்ட்டி நடந்தது. எல்லாரும் டான்ஸ் ஆடினாங்க.
ஏன் சிவா, இங்கிலீஸ் பாட்டுக்கு நீங்க ஆடமாட்டீங்களானு கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், இப்போதான்னே நான் திருச்சில இருந்து திண்டிவனமே வந்திருக்கேன். இன்னும் சென்னைக்கே வர்லனு சொன்னார். அத மறக்கவே முடியாது. அவ்ளோ ஹம்பிளான ஆளு. இன்னைக்கு கோலிவுட் தாண்டி தெலுங்கு சினிமாத்துறையிலும் வளர்ந்திருக்காரு. இன்னும் அவரு வளரவளர எங்களுடைய திருச்சி மாவட்டத்துக்கு பெருமை. தமிழ்நாட்டுக்கு பெருமை. அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவிச்சிக்கிறேன்.நன்றி'' என்றார்.