மேலும் அறிய

Marvel Studios Doctor Strange: 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்' படத்தின் முன்பதிவு வசூலே இத்தனை கோடியா?

 “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரையரங்களில் வெளியாவதற்கு முன்னரே 10 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இன்னும் 8 நாட்களில் வெளியாக இருக்கும் “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னரே 10 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. 

இந்தியாவில் முதல் முறையாக, படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன் முன்பதிவு தொடங்கப்பட்டது. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் திரைப்படம் தியேட்டரில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் மொழிகளில் மே 6, 2022 அன்று வெளியாகவுள்ளது. 

                                                       Marvel Studios Doctor Strange: 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்' படத்தின் முன்பதிவு வசூலே இத்தனை கோடியா?

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகவுள்ள இந்த திரைப்படம், அட்வான்ஸ் முன்பதிவு மூலமாகவே 10 கோடி வரை இந்தியாவில் வசூலித்துள்ளது. இந்த மிகப்பிரமாண்டமான பொழுதுபோக்கு திரைப்படம் வெளியீட்டிற்கு 30 நாட்களுக்கு முன்னர், அட்வான்ஸ் முன்பதிவு செய்யும்  விஷயத்தில், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஹாலிவுட் திரைப்படத்தில் இப்படியொரு அட்வான்ஸ் முன்பதிவு செய்வது இதுவே முதல்முறை.

கமல்  ஜியான்சந்தனி- CEO - PVR pictures கூறியாதவது.

“மார்வல் திரைப்படங்கள் எப்பொழும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு மேஜிக்கை நிகழ்த்தும். ஒரு மாதத்திற்கு முன்னரே அட்வான்ஸ் புக்கிங் செய்யும் முடிவு புத்திசாலிதனமான ஒன்று. அட்வான்ஸ் புக்கிங்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களிடமிருந்து வரும் வரவேற்பு, இந்தியா முழுவதும் ஷோக்களை சீக்கிரம் ஹவுஸ்புல் ஆக்கிவிடும்" என்று பேசினார்

தேவங் சம்பத், CEO Cinepolis கூறியதாவது,

“மார்வல் திரைப்படங்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. அவெஞ்சர்: எண்ட் கேம் திரைப்படத்திற்கு தான் ரசிகர்கள் மத்தியில் கடைசியாக பெரிய முன்பதிவுகள் இருந்தது. Cinépolis இந்தியாவில் 400 திரைகளில் இந்த திரைப்படத்தை வெளியிடுகிறது.”

                                                          Marvel Studios Doctor Strange: 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்' படத்தின் முன்பதிவு வசூலே இத்தனை கோடியா?

ராஜேந்தர் சிங் ஜியாலா, Chief Programming Officer, INOX Leisure கூறியாதவது..,

“மெட்ரோ நகரங்களில் எப்போதும் மார்வல் படத்திற்கு  பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கும். ஆனால் இந்த முறை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்திற்கு குறுநகர மார்கெட்களில் வந்த வரவேற்பு எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மார்வெல் திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கிய பிம்பத்தை,  இது காட்டுகிறது. ஐநாக்ஸ் திரையரங்குகளில் முன்பதிவு எண்கள் அபரிமிதமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் படம் பெரிய எண்ணிக்கையுடன் திரையிடப்படவுள்ளது."

 “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரைப்படம் தியேட்டரில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மே 6, 2022 அன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget