இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் புதிய ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது. இந்தியாவில் படம் வெளியாக இன்னும் 50 நாட்களே உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வர்த்தகம் கொண்ட திரையுலகமாக ஹாலிவுட் உள்ளது. இவர்களின் சில படங்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அப்படி இந்தியா உள்பட உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற படம் மார்வலின் அவெஞ்சர் வரிசை படங்கள்.
அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே:
அயர்ன்மேன், தோர், ஹல்க், ஸ்பைடர்மேன், கேப்டன் அமெரிக்க என பல சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை கொண்ட இந்த படங்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மார்வெலின் முக்கிய சூப்பர் ஹீரோக்கள் இணைந்து நடித்த அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ் என்ட்கேம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இதற்கு அடுத்து வந்த மார்வெல் படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெறாத நிலையில், ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் வரும் டிசம்பர் 17ம் தேதி அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே வெளியாகிறது.
அவன் முன்னாடி இப்படி இல்ல. Avengers: Doomsday இந்தியாவில் ஒரு நாள் முன்னதாக வெளியாகிறது. டிசம்பர் 17 அன்று திரையரங்குகளில் கண்டுகளியுங்கள். #AvengersDoomsday ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. #50DaysToDoomsday #17thDecemberIsDoomsday https://t.co/Kci06QrG60
— Marvel (@Marvel_India) October 28, 2026
புதிய ட்ரெயிலர் ரிலீஸ்:
இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஏனென்றால் இந்த படத்தில் மார்வெலின் சூப்பர்ஹீரோக்களான கேப்டன் அமெரிக்கா, தோர், ஸ்பைடர்மேன், ஹல்க், எக்ஸ் மேன் சூப்பர் ஹீரோக்கள், பென்டாஸ்டிக் 4 சூப்பர் ஹீரோக்கள் என மார்வெலின் அனைத்து கதாநாயகர்களும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் அயர்ன்மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகப்புகழ்பெற்ற ராபர்ட் டவ்னி ஜுனியர் இந்த படத்தில் டூமாக நடித்துள்ளார். இதனால், இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அவெஞ்சர்ஸ் திரைப்படங்களிலே மிகப்பெரிய வில்லனான தானோசைக் காட்டிலும் பன்மடங்கு சக்திவாய்ந்த கதாபாத்திரமாக டூம் உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு:
இந்த கதாபாத்திரத்தில் ராபர்ட் டவ்னி ஜுனியர் நடித்திருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படம் வெளியாக இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில், புதிய ட்ரெயிலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தை ஆண்டனி ரசோ - ஜோ ரசோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர். ஜெஃப்ரி ஃபோர்ட் மேத்யூ ஸ்கிமிட் படத்தொகுப்பு செய்துள்ளனர். ஆலன் சில்வெஸ்த்ரி இசையமைத்துள்ளார். மார்வெல் ஸ்டூடியோஸ் படத்தை தயாரித்துள்ளது. உலகெங்கும் படம் டிசம்பர் 18ம் தேதி வெளியானாலும் இந்தியாவில் டிசம்பர் 17ம் தேதியே வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளிலும் வெளியாகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















