மேலும் அறிய

Killers Of The Flower Moon: மர்மமான முறையில் கொல்லப்பட்ட பழங்குடி மக்கள்.. உண்மை சம்பவத்தால் உருவாகியிருக்கும் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்..!

மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் உருவாகியிருக்கும் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது

ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள திரைப்படமான கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்  படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

மார்ட்டின் ஸ்கார்செஸி

ஹாலிவுட்டின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மார்ட்டின் ஸ்கார்செஸி. ஹாலிவுட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் இயக்குனர்கள் மார்ட்டினை தங்களது குருவாக கருதி வருகிறார்கள். தமிழில் இன்று பல திரைப்படங்கள் மார்ட்டின் ஸ்கார்செஸியின் ஒரு காட்சியாவது நினைவுபடுத்தாமல் இருக்காது. ஹாலிவுட்டில் கிட்டதட்ட 25  திரைப்படங்கள், 16 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார் மார்ட்டின். தற்போது killers of the flower moon என்கிற படத்தை இயக்கியுள்ளார். லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ராபர்ட் டி நிரோ ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்

 எண்ணெய் வளத்திற்காக ஓசாஜே என்கிற  பழங்குடி மக்கள் மர்மமான முறையில் அமெரிக்கர்களால் கொல்லப்பட்ட உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டப் படம் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன். இவர்களை கொன்றது யார் என்கிற உண்மையைக் கண்டுபிடிப்பது படத்தின் மையக் கதையாக இருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் ஆப்பிள் டிவியில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

 

குவிந்த பாராட்டுகள்

கடந்த மே மாதம் நடைபெற்ற  சர்வதேச கான் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. மார்ட்டினின் ஆதர்ஷ நடிகர்களான லியோனார்டோ டிகாப்ரியோ,  ராபர்ட் டி நிரோ, ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தினை பார்த்த பார்வையாளர்கள் படத்தை பாராட்டும் விதத்தில் சுமார் 10 நிமிடம் தொடர்ந்து கைதட்டி மார்டின் ஸ்கார்செஸியைப் பெருமைப் படுத்தினார்கள்.

கடைசியாக மார்ட்டின் 1985 ஆம் ஆண்டு இயக்கிய after hours திரைப்படத்திற்காக கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் இதற்குப்பின் கிட்டதட்ட 37 ஆண்டுகள் கழித்து  திரைப்பட விழாவில் தனது படத்தை திரையிட்டார் மார்டின் ஸ்கார்செஸி. திரைப்பட ஆர்வலர்கள், திரைப் பிரபலங்கள், இயக்குனர்கள் என அனைவரும் இந்தப் படத்தைப் பார்க்க வரிசையில் நின்றனர். பல  மாணவர்கள் இந்த மாதிரியான ஒரு நிகழ்வில் மார்ட்டினின் படத்தை பார்த்து உற்சாகமடைந்தனர். 

 அதிகமுறை ஆஸ்கருக்குத் தேர்வான மார்ட்டின் ஸ்கார்செஸி

அதிகமான முறை ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் மார்டினும் ஒருவர்.கிட்டதட்ட 10 முறை சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகி உள்ளார் .இதில் 2007 ஆம் ஆண்டு தி டிபார்டட் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். டாக்ஸி டிரைவர்,ஷட்டர் ஐலண்ட்,  வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட், ரேஜிங் புல், போஸ்ட், என இவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் இயக்குநராக விரும்புபவர்கள் பாடமாக எடுத்துக்கொள்ளும் படைப்புகள்.

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget