Watch Video : தம்பியை முத்தத்தால் நனைத்த அண்ணன்! 'வாழை' படம் பார்த்த பின் உச்சகட்ட உணர்ச்சியில் நெகிழ வைத்த சூரி
Watch Video : மாரி செல்வராஜ் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஷோவை பார்வையிட்ட அனைவரும் வாழ்த்துக்களை குவித்து வரும் நிலையில் சூரி எப்படி பாராட்டினார் பாருங்க.
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து என்று அண்ணாந்து பார்க்க வைக்கும் இயக்குநர்களின் ஒருவர் மாறி செல்வராஜ். பரியேறும் பெருமாள் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்த மாரி செல்வராஜ், முதல் படத்திலேயே அனைவரின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை குவித்ததோடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
அடுத்ததாக அவர் இயக்கிய கர்ணன், மாமன்னன் என ஒவ்வொரு படைப்புமே தனித்துமான இடத்தை பெற்று கொடுத்தது. அந்த வரிசையில் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படைப்பு 'வாழை'.
தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் இப்படத்தை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாளை (ஆகஸ்ட் 23 ) திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை பார்த்த அனைவரும் மாரி செல்வராஜை பாராட்டு மழையில் நினைய வைத்து வருகிறார்கள். அந்த வகையில் 'வாழை' படத்தை பார்த்த நடிகர் சூரியின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது நீங்களே பாருங்க.
மாரி செல்வராஜ் தன்னுடைய சிறு வயதில் சந்தித்த பல விஷயங்களை 'வாழை' படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதில் அவரின் பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அடக்குவதால் அவர்கள் இப்படத்தை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை நினைத்தால் ஒரே பதட்டமாக இருக்கிறது. இது என்னுடைய பெற்றோருக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்பதால் படத்தை பார்க்க வேண்டாம் என கூறிவிட்டதாக அவரே தெரிவித்து இருந்தார்.
வாழை படத்தை தான் முதல் படமாக எடுக்க எண்ணியதாகவும் பிறகு மூன்று வெற்றிப் படங்களின் மூலம் தன்னுடைய அடையாளத்தை நிலைநிறுத்திய பிறகு இப்படத்தை வெளியிடலாம் என தள்ளி வைத்ததாகவும் தெரிவித்து இருந்தார். அதனால் தான் இப்படத்திற்கு இவ்வளவு பெரிய மேடை கிடைத்துள்ளது.
'வாழை' படத்தின் ப்ரீ ரிலீஸ் படத்தை பார்வையிட்ட பா. ரஞ்சித், மணிரத்னம், பாலா, ராம் மற்றும் பலர் பார்த்து பாராட்டியுள்ளனர். அந்த வகையில் மாரி செல்வராஜை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என மணிரத்னம் கூறியதும், பாலா கண்ணீருடன் ஆரத் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்ததும் கவனம் பெற்றுள்ளது.
'வாழை' படத்தை பார்த்த நடிகர் சூரி வெளியில் வந்ததுடன் மாரி செல்வராஜ் கட்டியணைத்து முத்தங்களால் முகத்தை நனைத்து வார்த்தைகள் இன்றி உணர்ச்சியால் பாராட்டுகளை தெரிவித்துவிட்டார். அங்கு வார்த்தைகளை காட்டிலும் உணர்ச்சி பரிமாறப்பட்டது தான் அருகில் இருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து.
அண்ணன் சூரியின் முத்தங்கள் ❤️
— Mari Selvaraj (@mari_selvaraj) August 22, 2024
-
வாழை
நாளைமுதல் pic.twitter.com/7z2Kfq5a0O
அண்ணன் சூரியின் முத்தங்கள் நிரம்பிய வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது. சூரியின் 'கொட்டுக்காளி' படமும் நாளை வெளியாக உள்ளது.