மேலும் அறிய

Manobala Flashback : பூணூலை அறுத்தேன் நாத்திகனாக மாறினேன்... ஆனால் இன்று..கவனம் ஈர்க்கும் மனோபாலாவின் பிளாஷ்பேக் நேர்காணல்  

மனோபாலா நாத்தீகனாக மாற என்ன காரணமாக இருந்தது என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் மனோபாலா கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கல்லீரல் பாதிப்பால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை மோசமடைந்ததால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இந்த இழப்பு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவு செய்தி கேட்டு பிரபலங்கள் பலரும் நேரில் சென்றும் சோஷியல் மீடியா மூலமும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

Manobala Flashback : பூணூலை அறுத்தேன் நாத்திகனாக மாறினேன்... ஆனால் இன்று..கவனம் ஈர்க்கும் மனோபாலாவின் பிளாஷ்பேக் நேர்காணல்  

மனோபாலா பூணூல் அறுத்த கதை :

கடவுள் பக்தி அதிகம் கொண்ட மனோபாலா தனது ஆன்மீக நாட்டம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த தகவல் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மனோபாலா தனது திரைப்பயணத்தை இயக்குநர் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக துவங்கியவர். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் மனோபாலா தான் அவரின் உதவி இயக்குநராக இருந்தவர். அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பூணூல் மற்றும் சிலுவையை அறுப்பது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று இருக்கும். அந்த காட்சியை எடுக்கும் போது பாரதிராஜாவின் தைரியத்தை பார்த்து மிரண்டு போனதாக மனோபாலா அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். அதன் தாக்கத்தால் கடவுள் மீது அதீத பக்தி கொண்ட மனோபாலா பெரியாரின் சிலை முன்னே நின்று அவரும் தன்னுடைய பூணூலை அறுத்து எறிந்து பின்னர் தீவிரமான நாத்திகராக மாறியதாக தெரிவித்து இருந்தார். 

மயில்சாமி - மனோபாலா
மயில்சாமி - மனோபாலா

 

கண்ணதாசன் ஸ்டைலில் ஆன்மீக பாதை :

அன்று பாரதிராஜாவை போலவே சாதி மத தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கும் இன்றைய இயக்குனர்களான பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டவர்களை மிகவும் பிடிக்கும் என்றுள்ளார். நாத்திகனாக மாறிய நான் வயது ஆக ஆக எதிர்காலம் பற்றிய பயம் வருவதால் மீண்டும் ஆன்மீக பாதையில் திரும்பிவிட்டேன். கண்ணதாசனைப்போல நானும் ஆன்மீக பாதையில் முழுமையாக இறங்கிவிட்டேன். நான் போகாத கோயில் இல்லை என்ற அளவிற்கு கடவுள் மீது மீண்டும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன்.  இருப்பினும் சாதி மதம் என்ற பாகுபாடு நிச்சயமாக பார்க்கமாட்டேன். எப்போதெல்லாம் நான் மனச்சோர்வாகவோ, கஷ்டமாகவோ உணர்கிறேனோ அப்போதெல்லாம் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன். என்னையும் என்னை சுற்றியுள்ளவர்களையும் காப்பாற்று என வேண்டிக்கொள்வேன் என தெரிவித்து இருந்தார். மேலும் தன்னை பற்றிய பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருந்தார். 

மனோபாலாவின் இந்த பிளாஷ்பேக் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. விவேக், மயில்சாமி, பாண்டு போன்ற நகைச்சுவை கலைஞர்களை தொடர்ந்து நடிகர் மனோபாலாவின் இறப்பும் திரையுலகிற்கு பெரும் இழப்பாகும். 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget