மேலும் அறிய

செட்டில் தான் ரகளை என்றால்.. ரோட்டிலும் லூட்டி! ஷிவாங்கி, மணிமேகலை காம்போ

செட்டில் தான் ரகளை என்றால் ரோட்டிலுமா லூட்டி எனக் கேட்கும் அளவிற்கு ஃபுட் வ்லாக் என்ற பெயரில் கூத்தடித்துள்ளனர் நம்ம ஷிவாங்கியும், மணிமேகலையும்.

செட்டில் தான் ரகளை என்றால் ரோட்டிலுமா லூட்டி எனக் கேட்கும் அளவிற்கு ஃபுட் வ்லாக் என்ற பெயரில் கூத்தடித்துள்ளனர் நம்ம ஷிவாங்கியும், மணிமேகலையும்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் செட்டில் ஷிவாங்கியும், மணிமேகலையும் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை எனலாம். இப்படியிருக்க சூட்டிங் ஸ்பாட்டை தாண்டி ரியல் லைஃபிலும் இருவரும் இணைந்து யூடியூபில் ஃபுட் வ்லாக் போட்டு லூட்டி அடிக்கின்றனர்.

விஜய் டிவியின் ஒவ்வொரு ஷோக்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சின்னத்திரை சீரியல்களை விட ரியாலிட்டி ஷோக்களுக்கு தான் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சிகள் தான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டராக உள்ளது. இதில் வரும் கோமாளிகளின் அலப்பறைகளைப் பார்ப்பதற்கே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஷிவாங்கி பங்கேற்றிருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் மக்களிடம் மிகுந்த பிரபலமானார். குக்வித் கோமாளி சீசன்1,சீசன் 2 மற்றும் சீசன் 3 என கலக்கிவருகிறார். அதிலும் சீசன் 2 வில் அஸ்வின் மீது க்ரஸ்ஸாக இருக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனையடுத்து தற்போது சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் முக்கியக் கேரக்டரில் நடித்துள்ளார் ஷிவாங்கி. இதோடு நடிகர் சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் காசேதான் கடவுளா உள்ளிட்ட சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ஷிவாங்கி. இப்படி குக் வித் கோமாளி சீசன் 3 மற்றும் சில திரைப்படங்களில் நடித்து வரும் ஷிவாங்கி பிஸியாக இருந்தாலும், சோசியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார். இன்ஸ்டாவில் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ போடுவார். சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி மூலமாக அனைவர் மனதையும் ஈர்த்தவர் ஷிவாங்கி . அனைவரும் தங்கள் வீடு செல்ல பிள்ளையாக அவரை கொண்டாடுகிறார்கள். 

ஷிவாங்கி செல்லப் பிள்ளை, மணிமேகலைக்கும் மக்கள் மனங்களில் ஒரு தனியிடம் இருக்கத்தான் செய்கின்றது. குக் வித் கோமாளி பிரபலமான மணிமேகலை தனக்கென்று ஒரு யூடியூப் சேனலை வைத்துள்ளார். இதற்கு பல லட்சம் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இவரின் யூடியூப் சேனலின் பெயர் 'ஹுசைன் மணிமேகலை'.

குறைந்தபட்சம் வாரம் ஒரு வீடியோவாவது இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும்.  இதிலும் பல காமெடி சீன்கள் இடம்பெறும். அதே போன்று இவரின் வீடியோக்கள் அடிக்கடி ட்ரெண்டிங் ஆவதும் வழக்கமான ஒன்று. மணிமேகலை வீட்டு ரைஸ் குக்கர் வெடித்த வீடியோவிற்கு வந்த கமென்ட்டெல்லாம் வேற லெவல் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
எப்போதும் லூட்டியடிக்கும் மணிமேகலையும், துருதுருவென இருக்கும் ஷிவாங்கியும் இணைந்து கலக்கிய ஃபுட் விலாக் வீடியோ ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.  பெங்களூருக்கு சென்று அங்குள்ள தெருக்களில் விற்கப்படும் பிரபல கடைகளின் உணவுகளை ருசி பார்த்து அதை வேடிக்கையான முறையில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோவை மணிமேகலையின் கணவரான ஹுசைன் தான் ஷூட் செய்துள்ளார்.

இதில் அவர்கள் பானி பூரி சாப்பிடும் பகுதியில் பண்ண ரகளையில் அந்தப்பகுதியே அதகளமானது. இதில் சிலர் மணிமேகலை, ஷிவாங்கியை அடையாளம் கண்டு செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். மணிமேகலையின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ இப்போது 6 லட்சம் வியூஸை கடந்து சென்றுகொண்டிருக்கிறது என்றால் பாருங்களேன்

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget