மேலும் அறிய

Manimegalai: அச்சச்சோ! காலில் கட்டு, அடிபட்ட நிலையில் ஃபோட்டோ பகிர்ந்த மணிமேகலை.. ரசிகர்கள் கவலை!

Manimegalai: குக்கு வித் கோமாளி புகழ் வி.ஜே. மணிமேகலை காலில் அடிபட்ட நிலையில் பதிவிட்டுள்ள புகைபடம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமான மணிமேகலை, பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளியில் கலந்து கொண்ட அவர் பெரும் புகழ் வெளிச்சத்தைப் பெற்றார்.

இவரின் ஹியூமர் சென்ஸ் காரணமாக ரசிகர்கள் மனிதில் இடம்பிடித்தார். முந்தைய சீசனில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய மணிமேகலை, தொடர்ந்து தன் சமுக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலில் கட்டுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “எதிர்பாராவிதமாக வழுவழுப்பான தரையில் விழுந்து காயம் ஏற்பட்டுவிட்டது. காலில் காயம். வருத்தமாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். 

மணிமேகலையின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ள நிலையில், விரைவில் மணிமேகலை நலம் பெற வாழ்த்தி கமெண்ட் செக்‌ஷனில் பதிவிட்டு வருகின்றனர். 

குக் வித் கோமாளியின் எனது கடைசி எபிசோட் இன்று ஒளிபரப்பாகிறது. இதில் "நானே வருவேன்" கெட்அப்பில் "நான் வரமாட்டேன்" என்று அறிவிக்கிறேன். 2019 ஆம் ஆண்டு முதல் சீசன் முதல் குக் வித் கோமாளியின் எனது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் அனைவருமே அபரிமிதமான அன்பைப் கொடுத்திருக்கிறீர்கள்.  எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சூழ்நிலைகளில் சிறந்த பங்களிப்பை அளிக்க நான் எப்போதும் கூடுதல் முயற்சி எடுக்கிறேன். குக் வித் கோமாளியில்  உங்கள் அனைவரையும் நான் மகிழ்வித்துள்ளேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அன்பு எதிர்பாராதது. நான் என்ன செய்தாலும் உங்களிடம் இருந்து அதே அன்பைப் எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்து அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

விஜே மணிமேகலை 

கடந்த 2009ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் மணிமேகலை. பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிய அவர் ரசிகர்களிடையே மிகப்பிரபலமான தொகுப்பாளராக வலம் வந்தார். தொடர்ந்து தனது நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஹூசைனை 2017 ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். பின்னர் அடுத்த சில நாட்களிலேயே அதிலிருந்து விலகினார். 

அதன்பிறகு விஜய் டிவியில்  எண்ட்ரீ கொடுத்த மணிமேகலை கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் அதே சேனலில் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சியில் கணவர் ஹூசைனுடன் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் மணிமேகலை வெற்றிப் பெறவில்லை என்றாலும் அதன்பிறகு விஜய் டிவியில் ஒருவராக மாறினார்.

தொலைக்காட்சியில் தனது பணியைத் தாண்டியும் மணிமேகலை எப்போதுமே தனது ரசிகர்களை எங்கேஜிங்காக வைத்திருக்க சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கிறார். யூடியூப் ஃபேஸ்புக்கில் வீடியோ, இன்ஸ்டாவில் போட்டோக்கள் என ஒவ்வொரு நாளும் அதகளப்படுத்திக்கொண்டிருக்கிறார். இவை ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

மேலும் வாசிக்க..

Bigg Boss 7 Tamil: தொக்காக சிக்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள்.. குறும்படம் போட தயாராகும் கமல்.. என்ன நடந்தது?

Bigg Boss 7 tamil: ஷாக்.. முதல் வார எவிக்‌ஷனில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய யுகேந்திரன்.. சரியாகக் கணித்த மனைவி மாலினி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget