மேலும் அறிய

நடிகை பாயல் ராஜ்புத்தின் ஷாக்கிங் போஸ்... இணையத்தை அதிரவைத்த மங்களவாரம் போஸ்டர்!

முத்ரா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.

’RX 100’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை பாயல் ராஜ்புத், இயக்குநர் அஜய் பூபதியின் ‘செவ்வாய் கிழமை’ படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி கவனமீர்த்துள்ளது.

இயக்குநர் அஜய் பூபதியின் ‘RX 100’ திரைப்படம் டோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அவரது மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த படத்துக்கு 'செவ்வாய்கிழமை' எனத் தலைப்பிடப்படப்பட்டுள்ளது.

தனது லக்கி சார்ம் நடிகையும் 'RX 100' படத்தின் மூலம் புகழ் பெற்றவருமான பாயல் ராஜ்புத்துடன் மீண்டும் இயக்குநர் அஜய் பூபதி இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து ‘ஷைலஜா’ என அவரது கதாபாத்திரத்தின் முதல் பார்வை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கண்களில் கசப்பான உணர்வுடன் விரலில் பட்டாம்பூச்சியுடனும் நடிகை பாயல் ராஜ்புத் அரை நிர்வாணமாக இந்த போஸ்டரில் தோன்றியிருக்கும் நிலையில், தற்போது இணையத்தில் இந்த போஸ்டர் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் உடன் இணைந்து தயாரிப்பாளராக, இயக்குநர் அஜய் அறிமுகமாகிறார். முத்ரா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.

படத்தின் சுவாரஸ்யமான முதல் பார்வை குறித்து இயக்குநர்- தயாரிப்பாளர் அஜய் பூபதி பேசியதாவது, “'செவ்வாய்கிழமை' திரைப்படம் 90களில் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் திரில்லர். பாரம்பரியமான நம் மண்ணின் தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும்.  திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பாயலின் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும்.

இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத புதிய வகை ஜானரில் இந்தப் படம் இருக்கும். கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன, ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானது" என்றார்.

தயாரிப்பாளர்கள் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் ஆகியோர் பேசுகையில், ’RX 100'  படத்தின் சிந்து போல, அஜய் பூபதியின் 'செவ்வாய்கிழமை' ஷைலஜாவும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் நினைவில் இருக்கும். நாங்கள் 75 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம்.

படத்தை உயர் தொழில்நுட்ப தரத்தில் உருவாக்குகிறோம். படத்தின் கடைசி ஷெட்யூலை அடுத்த மாதம் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். படத்தின் கதை அற்புதமாக உள்ளது. இது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். 'காந்தாரா' புகழ் அஜனீஷ் லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Embed widget