மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடிக்கும்போது த்ரிஷாவிடம் இருந்து வந்த மெசேஜ்...மனம் திறந்த மாளவிகா மோகணன்
மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்தபோது நடிகை த்ரிஷாவிடம் இருந்து தனக்கு வந்த மெசேஜ் குறித்து நடிகை மாளவிகா மோகணன் பகிர்ந்துகொண்டார்.

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பாலும், தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்களாலும் கவனம் பெற்றவர் மாளவிகா மோகனன். மலையாளத் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர், விக்ரமுடன் தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
த்ரிஷா குறித்து மாளவிகா மோகணன்
தனது ஆரம்ப கால திரைப்பயணம் குறித்து பேசும்போது, நடிகை திரிஷா தனக்கு அளித்த ஆதரவை மாளவிகா மோகனன் நினைவுகூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர், “பேட்ட படத்தில் நடித்தபோது நான் புதுமுகமாக இருந்தேன். திரிஷாவுடன் எனக்கு காம்பினேஷன் காட்சிகள் இருந்தன. அவர் மிகவும் இனிமையானவர். என்னை மிகவும் வசதியாக உணரச் செய்தார். வாரணாசியில் நாங்கள் படப்பிடிப்பில் இருந்தபோது ஒன்றாக நேரம் செலவிடுவோம்.
மாஸ்டர் படத்தின் வந்த த்ரிஷாவின் மெசேஜ்
மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்தபோது தனக்கு த்ரிஷாவிடம் இருந்து வந்த மெசேஜ் குறித்து மாளவிகா மோகணன் பகிர்ந்துகொண்டார். “நான் மாஸ்டர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது, ‘Hey Babe, I'm so happy for you, this is huge & congratulations’ என்று எனக்கு மெசேஜ் செய்தார். அப்படி ஒருவர் உண்மையான மனதுடன் மகிழ்வது என்பது மிகவும் சிறப்பான விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.
மாளவிகா மோகனன் தற்போது நடித்துள்ள சர்தார் 2, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர். கார்த்தி இதில் சர்தார் மற்றும் விஜய் பிரகாஷ் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா ‘பிளாக் டாகர்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ராஷி விஜயன், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















