மேலும் அறிய

Malavika mohanan: தங்கலான் படத்திற்கு தயார்...! கெத்தாக போட்டோ போட்ட மாளவிகா மோகனன்!

தங்கலான் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பிற்கு கடுமையான உடற்பயிற்சி எடுத்துக்கொள்ளும் மாளவிகா மோகனன் தனது புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

 நடிகை மாளவிகா மோகணன் தனது ட்விட்டர் பக்கத்தில் உடற்பயிற்சிக்கு பின் எடுத்த புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார். தங்கலான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால் அதற்கு தான் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார் மாளவிகா.

நடிகை மாளவிகா மோகனன் தமிழ்,மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அவர் இயக்குனர் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டு இருக்கும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்ப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. இதனிடையில் நடிகை மாளவிகா மோகனன் படப்பிடிப்பிற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில்  தனது ஃபிட்னஸை காட்டும் வகையில் புகைப்படங்களை பதிவேற்றி உள்ளார் அவர். இந்த பதிவிற்கு மேல் படப்பிடிப்பிற்கு தான்  தயார் என கேப்ஷனும் கொடுத்திருக்கிறார் அவர். அவரது இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல்  ஃபிட்னஸ் மேல் ஆர்வம் கொண்ட பலரையும் உற்சாகப் படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்பட உலகிற்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர்ஸ்டார்  ராஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். இந்த படத்தில் அவர் பெரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் இராணியத் திரைப்பட இயக்குனரான மஜித் மஜிதி முதல் முதலாக இயக்கிய இந்தியத் திரைப்படமான பியாண்ட் தி க்ளவுட்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது. இந்த படத்தின் வாயிலாக இவர் தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட் ரசிகர்களையும் ஈர்த்தார். இதனை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் மாளவிகா. சமூக வலைதளங்களில் தனது ஃபேஷனிற்காகவும் ஃபிட்னசிற்காகவும் பரவலாக அறியப்படுபவர் மாளவிகா. தனது கரீயரை மாடலாக தொடங்கியவர் என்பதாலேயே பேஷனில் மாளவிகா எப்போதும் அசத்தக் கூடியவராக இருந்து வருகிறார். அதே நேரத்தில் ஃபிட்னஸில் அதிகமாக கவணம் செலுத்துபவர். தற்போது இந்த புகைப்படங்கள் தங்கலான் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை மேலும்  கூட்டியுள்ளது.

பா. ரஞ்சித் நடிகர் விகரமை வைத்து தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு நடைபெற்று வருகிறது . அண்மையில் முடிந்த நடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இது அந்த படத்தின்மேல் இருக்கும் ஆர்வத்தை ரசிகர்களிடம் பல மடங்கு அதிகமாக்கியது. இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார். ஞானவேல் ராஜா இந்த படத்தினை தயாரித்துள்ளார். அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்ரமின் தங்கலான் படத்தின் மேல் பெரும் எதிர்பார்ப்பு குவிந்துள்ளது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget